பர்ஸ்ட் மாமா இப்போ பெரியப்பா… மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு

Published On:

| By Manjula

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்புவிற்கு, தற்போது பெரியப்பாவாக புதிய புரமோஷன் கிடைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிம்புவின் தங்கை இலக்கியாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சிம்புவிற்கு மாமா என்னும் புரோமோஷன் கிடைத்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் நடிகர் சிம்பு பெரியப்பாவாக புதிய புரோமோஷன் பெற்றுள்ளார். திருமணம் ஆகி 4 ஆண்டுகள் கழித்து சிம்புவின் தம்பி தற்போது குறளரசன் அப்பாவாகி இருக்கிறார்.

ADVERTISEMENT

குறளரசனுக்கும், நபீலா என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி விமரிசையாக திருமணம் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னர் நபீலாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர், சிம்பு, குறளரசன் என மொத்த குடும்பத்தினரும் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

தற்போது ரசிகர்கள் சிம்புவிற்கும், அவரது தம்பி குறளரசனுக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கடைசியாக ‘பத்து தல’ படத்தில் நடித்திருந்த சிம்பு அடுத்ததாக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், அவருடைய 48-வது படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share