திருநங்கையாக நடிக்கும் சிம்பு.. இது நம்ப லிஸ்ட்லயே இல்லயே..?!

Published On:

| By Manjula

simbu str 48 villain

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. அவரது உடல் எடை அதிகரித்ததால் சரியான படங்கள் இல்லாமல் இருந்தார். இதனால் சிம்பு ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிம்பு ‘மாநாடு’ படத்தின் மூலம், உடல் எடையைக் குறைத்து தரமான கம்பேக் கொடுத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இப்படம், ரூபாய் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

ADVERTISEMENT

அடுத்தடுத்து அவர் நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ‘பத்து தல’ திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

simbu str 48 villain

ADVERTISEMENT

தற்போது சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் அவரது 48-வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

ADVERTISEMENT

இந்த படத்திற்காக சிம்பு தனது லுக்கை மாற்றிய புகைப்படங்களும் வைரலானது. ஆனால் அதற்குப் பிறகு எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், இந்த படம் பற்றிய முக்கிய தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

அதாவது இந்த திரைப்படம் உருவாகுவது உறுதிதானாம். இதில் சிம்பு திருநங்கையாக நடிக்கிறார் என்பது தான் முக்கியமான தகவல். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறதாம்.

simbu str 48 villain

மேலும் அடுத்ததாக ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் முடிவடைந்தது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இது மட்டுமின்றி சிம்புவின் ஐம்பதாவது திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம்.

முன்னணி இயக்குனர் ஒருவர் இதை இயக்க இருக்கிறார் என்றும், இந்த படத்தை பற்றிய அறிவிப்புகள் சீக்கிரமே வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: தேனி… யார் திசையில் வெற்றிக் காற்று?

கிச்சன் கீர்த்தனா: முருங்கை – தால் சூப்

மின்னம்பலம் மெகா சர்வே: தர்மபுரி… தட்டிப் பறிப்பது யார்?

குழந்தை பிறந்த கையோடு… மீண்டும் ‘குட்’ நியூஸ் சொன்ன காயத்ரி… வாழ்த்தும் ரசிகர்கள்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share