‘வெந்து தணிந்தது காடு’ : சிம்பு படத்தின் புது அப்டேட்!

Published On:

| By Guru Krishna Hari

நடிகர் சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தான தகவல் வெளியாகி உள்ளது.

கெளதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இதில் முத்து என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் இந்த கதையில் கெளதம் மேனனுடன் இணைந்துள்ளார்.

ADVERTISEMENT

கெளதம் மேனன் – சிலம்பரசன் கூட்டணியில் இதற்கு முன்பு வந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களில் இருந்து இந்த படம் வித்தியாசமான படைப்பாக வெளிவரும் என்பது படத்தின் போஸ்டர் மற்றும் முன்னோட்ட காட்சிகளில் இருந்து தெரிய வருகிறது. ‘மாநாடு’ படத்தை விட இந்த படத்திற்காக சிலம்பரசன் மேலும் உடல் இளைத்துள்ளார்.

ராதிகா சரத்குமார் இந்த படத்தில் சிலம்பரசனின் அம்மா கதாப்பாத்திரத்திலும் கதாநாயகியாக சித்தி இத்நானியும் நடித்துள்ளனர். திருச்செந்தூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. படம் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளது.

ADVERTISEMENT

படத்தினை ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவினை சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களை அழைக்கும் எண்ணத்திலும் படக்குழு உள்ளது.

ஆதிரா

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share