அயலானுக்காக களமிறங்கிய பிரபல நடிகர்… பொங்கல் ட்ரீட் லோடிங்!

Published On:

| By Manjula

சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்காக முன்னணி நடிகர் ஒருவர் களத்தில் இறங்கியுள்ளார்.

அதிக பட்ஜெட் மற்றும் பல்வேறு தடைகள் காரணமாக தாமதமாகிக் கொண்டே வந்த, சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் 2024 பொங்கலுக்கு வருவது உறுதி ஆகியுள்ளது.

இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிக்குமார் எழுதி இயக்கி இருக்கும் இப்படத்தில், நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

அவருடன் இணைந்து ராகுல் பிரீத் சிங், சரத் கெல்கர் இஷா கோபிகர், யோகி பாபு, பானுப்பிரியா, கருணாகரன், பால சரவணன் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்.

நீரவ்ஷா ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஎம் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து பாண்டோம் எப்எக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் ஏலியன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ள நடிகர் யார்? என்னும் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி ‘சித்தா’ படத்தின் மூலம் ரசிகர்களை நெகிழச்செய்த நடிகர் சித்தார்த், இப்படத்தில் ஏலியனுக்காக குரல் கொடுத்துள்ளார்.

முன்னதாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில், நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

சென்னை வெள்ளம்! பாஜக கராத்தே தியாகராஜன் அட்டாக்… அமைச்சர் துரைமுருகன் ஆக்‌ஷன்!

ரேஷன் அட்டை இல்லாதவர்கள் வெள்ள நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்கலாமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share