ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி : என்ன ஆச்சு?

Published On:

| By Kavi

பாலிவுட் பாஷா என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ஷாருக்கான். கடந்த 2023 ஆம் ஆண்டு ஷாருக்கானின் ஆண்டு என்று சொல்லலாம்.

2023 ஆண்டில் மட்டும் பதான், ஜவான், டன்கி என 3 மெகா பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து கொரோனாவால் சரிந்து கிடந்த பாலிவுட்டை பழைய நிலைக்கு கொண்டு வந்தார்.

அடுத்ததாக “தி கிங்” என்ற திரைப்படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரான நடிகர் ஷாருக்கான், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடும் போட்டிகளை நேரில் கண்டு தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில் ஷாருக்கான் உடல்நிலை குறைபாடு காரணமாக அகமதாபாத்தில் இருக்கும்  பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மே 21 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் முதல் குவாலிஃபயர் சுற்று கொல்கத்தா அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியை காண நடிகர் ஷாருக்கான் அகமதாபாத் சென்று இருக்கிறார்.


போட்டி முடிந்த பிறகு ஷாருக்கானின் உடல்நிலை சீராக இல்லை என்பது தெரிந்தவுடன் அகமதாபாத்தில் உள்ள கே.டி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Heat stroke காரணமாக ஷாருக்கானின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்றும், கூடிய விரைவில் அவர் குணமாகி வீடு திரும்பிவிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: தினமும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துபவரா நீங்கள்?

கிச்சன் கீர்த்தனா: அவரைப்பருப்பு சாதம்!

டிஜிட்டல் திண்ணை: மோடி பிரதமர் ஆக மாட்டார்… ஆர்.எஸ்.எஸ்.சின் அடுத்த பிளான்!

கடவுளின் தூதரா மோடி? ஆ.ராசா பளிச் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share