நடிகர் செந்தில் சின்னத்திரையில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர். பல பிரபலமான தொடர்களில் அவர் நடித்தவர்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா சீரியலில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் செந்தில் தான் சைபர் க்ரைமில் பணம் இழந்துவிட்டதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.actor senthil lost money
வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, ” எவ்வளவுதான் படிச்சிருந்தாலும் உலக அறிவு இருக்குதுனு நினைச்சாலும் சப்பையா ஒருத்தன் என்கிட்ட 15 ஆயிரம் ஆட்டையை போட்டுட்டான். எனக்கு இப்போ அழுறதா அல்லது சிரிக்கிறதா என்று தெரியவில்லை. இந்த கதையை கேளுங்க. உங்கள் நண்பர்கள் கிட்டையேயும் சொல்லுங்க. அப்போதான், அவங்க எச்சரிக்கையா இருப்பாங்க . இப்போ, கதையை கேளுங்க.
கோவையைச் சேர்ந்த பெரிய ஹோட்டல் நடத்தும் தொழிலதிபர். அவர் என்னோட நண்பர். அவருடைய வாட்ஸ்அப் நம்பரில் இருந்து எனக்கு மெசேஜ் வந்தது. 15 ஆயிரம் பணம் கேட்டிருந்தார். அவர்கிட்ட இருந்து ரொம்ப ரேராதான் மெசேஜ் வரும். அவ்ரே பணம் கேட்டிருந்ததால், நான் ட்ரைவிங்கில் இருந்த நிலையில் அவர் சொன்ன நம்பருக்கு பணம் அனுப்பிவிட்டேன். பின்னர் , பெயரை பார்த்தால் மற்றொரு நபரின் வங்கி கணக்குக்கு பணம் போயிருந்தது. actor senthil lost money
இது தொடர்பாக நண்பரிடம் போன் செய்து கேட்டபோது ,அவரோ எனது வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக கூறினார். மேலும், ஏராளமானோர் இது போன்று எனக்கு போன் செய்துள்ளனர் என்றும் நண்பர் சொன்னார். அப்போதுதான், சைபர் கிரைம் கொள்ளையர்களிடம் பணத்தை இழந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.