Video: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

Published On:

| By Manjula

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி வில்லன் நடிகராக இருப்பவர் நடிகர் சாயாஜி ஷிண்டே. பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

அதன் பிறகு தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக மிரட்டி உள்ளார். கண் பார்வையிலேயே வில்லத்தனத்தை கடத்தக் கூடியவர்.

குறிப்பாக பூவெல்லாம் உன் வாசம், பாபா, தூள், அழகி, சந்தோஷ் சுப்பிரமணியம், படிக்காதவன், வேட்டைக்காரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே, காலா போன்ற பல்வேறு சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்த நடிகர் ஷாயாஜி ஷிண்டேவிற்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. உடனே அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

https://twitter.com/mazhil11/status/1778753618814050739

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதயத்திற்கு செல்கின்ற குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்த பின் தற்பொழுது அவர் நலமாக உள்ளார்.

இந்த செய்தி அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து அவர் நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் நடிகர் சாயாஜி ஷிண்டே , ”நான் நலமாக இருக்கிறேன். என்னை நேசிக்கும் ரசிகர்கள், நலம் விரும்பிகள் என்னுடன் உள்ளனர். கவலைப்பட ஒன்றுமில்லை. விரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்”, என வீடியோ வெளியிட்டு அறிவித்து இருக்கிறார்.

பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Mayank Yadav: வந்த ‘திடீர்’ சிக்கல்… என்ன செய்யப்போகிறது லக்னோ?

நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னம் மாற்றப்பட்டதா? : சத்ய பிரதா சாகு விளக்கம்!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share