மனைவிக்கு கோமா: வெறுப்பு பேச்சுக்கு சத்யராஜ் கொடுத்த பதிலடி!

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் நடிகர் சத்யராஜின் மகள், தனது அம்மா கடந்த 4 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறார். நாங்கள் அவரை குழந்தை போல பராமரித்து வருகிறோம். எனது தாயார் மீண்டும் எனக்கு கிடைப்பார் என்று நம்புகிறேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

அப்போதுதான், நடிகர் சத்யராஜ் வீட்டில் இவ்வளவு பெரிய சோகம் நடந்துள்ளதா? என்பது பலருக்கும் தெரிய வந்தது. பல ரசிகர்கள் சத்யராஜ் மகள் பதிவில் ஆறுதல் கூறியிருந்தனர். சிலர் சத்யராஜை விமர்சித்தும் கமெண்ட் செய்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில், கலாட்டா யூடியூப் சேனலுக்கு சத்யராஜ் பேட்டி அளித்தபோது, “சத்யராஜ் சாமி கும்பிடுவதில்லை. அதனால்தான் அவரது மனைவிக்கு இப்படி நடந்துள்ளது  என சிலர் கமெண்ட் செய்கின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?” எனக் கேள்வி கேட்கப்பட்டது

அதற்கு அவர், ” ஏன் சாமி கும்பிடுறவன் வீட்டுல யாரும்  சாகலையா?  சாமி கும்புடுறதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. சாமி கும்பிடுறவங்க வீட்டில் யாருக்கும் மாரடைப்பு வருவதில்லையா? விபத்து ஏற்படுவதில்லையா? மரணம் ஏற்படுவதில்லையா? தற்கொலை நடக்கவில்லையா? குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்ற வேன் கவிழ்ந்து இறப்பு நடப்பதில்லையா?  உளறுபவர்கள் உளறிக்கொண்டு இருப்பார்கள், அதையெல்லாம் கண்டுக்காமல் போய் கொண்டே இருக்கனும்” என்று பதில் அளித்தார்.

ADVERTISEMENT

கடந்த 1979-ஆம் ஆண்டு நடிகர் சத்யராஜ் மகேஷ்வரியை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு சிபி, திவ்யா என்று இரு குழந்தைகள் உண்டு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

எம்.குமரேசன்

‘அரசு உதவவில்லை’- 7 நடிகர்கள் மீது பாலியல் வழக்கை வாபஸ் பெறும் கேரள நடிகை!

அப்பாவுக்கு சளைக்காத பிள்ளை … மின்னல் வேகத்தில் 200 ரன்களை அடித்த சேவாக் மகன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share