சசிகுமார் படத்திற்காக  ஈசிஆரில் கிராமம் செட்!

Published On:

| By Kavi

Actor Sasikumar New Movie with Kazhu Director Sathiya Siva

கழுகு, சிவப்பு, கழுகு 2 ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சத்ய சிவா. இவரது இயக்கத்தில் தற்போது நடிகர் சசிகுமார் ஹீரோவாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஜெய் பீம் பட நாயகி நடிகை லிஜோ மோல் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த படம் குறித்து இயக்குனர் சத்ய சிவா கூறியதாவது, 1995 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கி வருகிறோம்.

90கள் காலகட்டத்தை திரையில் எதார்த்தமாக காட்ட வேண்டும் என்பதற்காக சென்னை  ஈசிஆரில் ஒரு பெரிய கிராமம் செட்டப் அமைத்து படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு உள்ளது. அதற்காக கேரளா செல்ல உள்ளோம். இந்த படத்தின் டைட்டில் மற்றும் மற்ற அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறினார்.

ADVERTISEMENT

ஏற்கனவே இயக்குனர் சத்ய சிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான “நான் மிருகமாய் மாற” திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை தராததால், இந்த புது படம் இருவருக்கும் வெற்றியை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

– கார்த்திக் ராஜா

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

“விஜய் படம் என்றாலே ஏதோ ஒரு பிரச்சினை” : லோகேஷ் கனகராஜ்

மருத்துவமனை தாக்குதல் இஸ்ரேல் செய்யவில்லை- ஐஎஸ்ஐஎஸ் சை விட கொடியது ஹமாஸ்: அமெரிக்க அதிபர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share