ஹேப்பி ஸ்ட்ரீட் கலாச்சாரம் :கொந்தளித்த ரஞ்சித்

Published On:

| By Manjula

ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில்  பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆடும் கலாச்சாரத்தை தடை செய்ய வேண்டும் என நடிகர் ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வார இறுதி நாளான ஞாயிறுகளில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ என்னும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் மன அழுத்தம் குறையவும், வாரத்தின் முதல் நாளை புத்துணர்வுடன் தொடங்கவும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

இதில் ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு நடனம், பாட்டு என தங்களை உற்சாகப்படுத்தி கொள்கின்றனர். குறிப்பாக அப்பகுதி குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோரின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை சவுரிபாளையத்தில் நேற்று (நவம்பர் 4) இரவு நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என ஆதங்கப்பட்டார்.

ADVERTISEMENT

அவர் அளித்த பேட்டியில் , ”சமீபகாலமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு தெருவிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.நீங்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் அம்மா-அப்பா யார்? பெண் குழந்தைகளை அரைகுறை ஆடைகளுடன் தெருவில் ஆட விடுகிறீர்கள். என்னிடம் அதிகாரம் இருந்தால் அனைவருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்து விடுவேன்.

ADVERTISEMENT

யார் மகனும், யார் பெண்ணும், யாருடனும் ஆடலாம். அதுதான் ஹேப்பி ஸ்ட்ரீட். மன அழுத்தத்தை போக்க தெருவில் கூத்தடிப்பதுதான் இது. இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி எதிர்காலத்தில் அடுத்த கட்டத்துக்கு போகும். ஒரு தாய்லாந்து போலவோ, சிங்கப்பூரை போலவோ நம் நாடும் மாறிவிடும். அப்படி ஒரு கலாச்சாரம் இங்கு வரக்கூடாது. வரவும் விடமாட்டோம். ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு பதிலாக வள்ளி கும்மி ஆட்டம் போன்ற பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளை நாம் ஆதரிக்க வேண்டும்,” என்றார்.

நடிகர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

இன்றும், நாளையும் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

இரவில் வேகமாக செல்லலாமா?: போக்குவரத்து கூடுதல் ஆணையர் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share