நடிகர் ரஞ்சித் நடித்த கவுண்டம்பாளையம் திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 9) வெளியானது.
சேலம் கருப்பூரில் ரசிகர்களுடன் சேர்ந்து ரஞ்சித் நேற்று இந்தப் படத்தை பார்த்தார். பின்னர், செய்தியாளர்களிடத்தில் பேசிய நடிகர் ரஞ்சித் ஆணவக் கொலை வன்முறையல்ல என்றும் பெற்றோருக்குதான் அந்த வலி தெரியும் என்றும் பேசியிருந்தார்.
மேலும், இதுவும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது காட்டும் அக்கறை போன்றதுதான் என்றும் நடிகர் ரஞ்சித் கூறியிருந்தார் . அதோடு, தான் நல்ல எண்ணத்துடன்தான் படங்களை எடுத்து வருவதாகவும் சிலர் வேண்டுமென்றே தன் மீது வன்மத்தை காட்டுவதாகவும் ரஞ்சித் குறை கூறியிருந்தார்.
ரஞ்சித்தின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, பலரும் அவரை விமர்சித்துள்ளனர். ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்று அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் நடிகர் ரஞ்சித் இப்படி பேசியிருப்பது ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேப்பி ஸ்டீரீட்டில் இளம் பெண்கள் முன்பின் தெரியாதவர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவதாக கூறி நடிகர் ரஞ்சித் சர்ச்சையில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்.குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயநாட்டில் மோடி… பினராயி விஜயன் வைத்த டிமாண்ட்!
எமனை ஏமாற்றிய ஒற்றைப் பயணி… பிரேசில் விமான விபத்தில் விநோதம்!