நடிகர் ராமராஜன் வீட்டில் நடந்த சோகம்!

Published On:

| By christopher

தமிழ் சினிமாவில் ‘மக்கள் நாயகன்’ என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ராமராஜன். இன்றைய காலத்தில் விஜய், அஜித்திற்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் போல, ஒரு காலகட்டத்தில் ராமராஜனின் திரைப்படங்களை பார்க்க கிராமத்து மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பார்கள்.

நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர் ராமராஜன். 1986 ஆம் ஆண்டு வெளியான ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

ஆனால் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் தான். 1989 ஆம் வருடம் கங்கை அமரன் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியானது. இதில் வந்த கவுண்டமணி, செந்தில் காமெடி இன்றளவும் ரசிக்கப்படுகிறது. தொடர்ந்து வருட கணக்கில் இந்த திரைப்படம் தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்தது.

இப்படி கிராமத்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ராமராஜன், நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்பொழுது பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் ராமராஜனின் வீட்டில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அவரது அக்கா புஷ்பவதி மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 75. மதுரையில் தனது குடும்பத்தினருடன் அவர் வசித்து வந்தார்.

Actor ramarajan sister pushpavathy death madurai tommorrow funeral |  Ramarajan: பிரபல நடிகர் ராமராஜன் குடும்பத்தில் பெரும் சோகம்! உயிரிழந்தது  யார் தெரியுமா?

சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராமராஜன் தனது அக்காவின் இறுதி சடங்கில் பங்கேற்க மதுரையில் உள்ள மேலூருக்கு விரைந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியங்கா

”பெண் காவலர்கள் குறித்து பேசியதை சவுக்கு சங்கர் தவிர்த்திருக்கலாம்” – சீமான்

ஒலிம்பிக் கனவிற்கு செக் வைத்த NADA… மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா எதிர்ப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share