இன்று வெளியாகிறது ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்!

Published On:

| By Minnambalam

இன்று (ஆகஸ்ட் 22) காலை 11 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில், அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ADVERTISEMENT

இந்தப் படத்திற்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது.

actor rajinikanth jailer movie

ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ADVERTISEMENT

ஜெயிலர் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகிவில்லை. படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் படக்குழு வெளியிடவில்லை.

actor rajinikanth jailer movie

இந்தநிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், 22.08.2022 – 11.00 AM என்ற ஹேஷ்டாக்குடன் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலாக நிற்கும் காட்சி உள்ளது. அதன்படி, இன்று காலை ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால் ரஜினி  ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT

படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு இதில் வெளியாகலாம் என்றும் படத்தில் நடிக்க போகும் நடிகர்கள், துணை நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் ரசிகர்கள் இணையதளங்களில் பேசி வருகின்றனர்.

செல்வம்

ஹைதராபாத்தில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share