நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கிய காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் தாய்லாந்து செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜனவரி 6) சென்னை ஏர்போர்ட்டுக்கு கிளம்பி வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிந்துள்ளது. வரும் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளேன்” என்று கூறினார்.
அவரிடம் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு… அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தபோது, “அரசியல் கேள்விகளை கேட்கக்கூடாது என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்…” என்று கோபமாக கூறினார்.
இதனிடையே ரஜினி ரசிகர்கள் ஏர்போர்ட்டில் குவிந்திருந்த நிலையில் அவரைப் பார்த்ததும் தலைவா தலைவா என்று கோஷம் எழுப்பினர். அப்போது இது போன்ற சத்தம் போடக்கூடாது என்று ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சென்னை, சேலத்தில் ஹெச்எம்பிவி வைரஸ்: சுகாதாரத் துறை சொல்வது என்ன?