‘கேப்டன்’ விஜயகாந்த் மறைவிற்குப் பின், நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படை தலைவன்’ படத்தில், சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்க ரெடியாக உள்ளேன் என்று, தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் தான் ஏற்கனவே சொன்னபடி தற்போது ‘படை தலைவன்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து கொடுத்துள்ளார்.
இதுகுறித்து படை தலைவன் இயக்குநர், ”ராகவா லாரன்ஸ் மாஸ்டரிடம் இதுகுறித்து கேட்டபோது, தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்று கூறி, சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்தார். அவரின் சிறப்பு தோற்றம் படத்திற்கு வலிமை சேர்த்துள்ளது,” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘படை தலைவன்’ படத்தில் அவருடன் இணைந்து கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ‘வால்டர்’, ‘ரேக்ளா’ புகழ் யு.அன்பு இயக்கும் இப்படத்திற்கு, இளையராஜா இசை அமைக்கிறார். திரைக்கதை, வசனத்தை பார்த்திபன் தேசிங்கு எழுதியுள்ளார்.
தற்போது ‘படை தலைவன்’ படத்தின் 80% படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியினை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Weekend Movies: திரையரங்குகள், ஓடிடி-யில்… இந்த வாரம் வெளியாகியுள்ள படங்கள்!
IPL 2024: ”எல்லாம் மாறும்” புது கேப்டனுக்காக வீடியோ வெளியிட்ட CSK