ADVERTISEMENT

பாகுபலி – கே ஜி எஃப் கலவையாக ‘சலார்’!

Published On:

| By Monisha

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்து வரும் திரைப்படம் ‘சலார்’. இந்தப் படத்தில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

‘சலார்’ படத்தைப் பற்றிய புதிய தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகவும், படக் குழுவினர், நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை வாய்ப்பாகக் கருதி, அவர் நடித்திருக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத் தோற்றப் புகைப்படத்தை இன்று (அக்டோபர் 16) வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகரான பிரித்விராஜ் சுகுமாரன், வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், ‘சலார்’ படத்தைப் பற்றிய நேர் நிலையான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார்’ எனப் படக் குழுவினர் கூறுகின்றனர்.

‘சலார்’ படத்தில் இடம்பெறும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரம், கதையின் நாயகனான பிரபாஸிற்கு இணையான கதாபாத்திரமாகப் படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் அற்புதமான நடிப்பைக் காண்பதற்கு ரசிகர்களிடம் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

பிருத்விராஜின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், ”பிருத்விராஜ் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர், ‘சலார்’ படத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான வேறு நடிகரை நாங்கள் பெற்றிருக்க இயலாது.

ADVERTISEMENT

படத்தில் அவர் வரதராஜ மன்னார் கதாபாத்திரத்தில் பொருத்திக்கொண்டு நடித்த விதம், அவரது அற்புதமான நடிப்புத் திறமையை நிரூபிக்கிறது. அவரது தனித்துவமான நடிப்பு, ரசிகர்களைப் பெரிதும் ஈர்க்கும்.

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பிரித்விராஜ், பிரபாஸுடன் இணைந்து நடித்திருப்பதும், இவ்விருவரையும் இயக்கியதும் அற்புதமான அனுபவம்” என்றார்.

‘கே ஜி எஃப் 2’ படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் பிரசாத் நீல் மற்றும் அதன் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ், ‘சலார்’ படத்தில் இணைந்திருக்கிறது.

பாகுபலி நட்சத்திரமும், ‘கே ஜி எஃப்’ தயாரிப்பாளர்கள் மற்றும் அதன் தொழில்நுட்பக் குழுவினரும், ‘சலார்’ படத்தில் இணைந்திருப்பதால், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சலார்’ படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பன்முக ஆளுமைத் திறன் கொண்ட நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன், வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

மேலும் ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘பாகுபலி’ மற்றும் ‘கே ஜி எஃப்’ ஆகிய இரண்டின் கலவையாக ‘சலார்’ உருவாகி வருகிறது.

இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

இராமானுஜம்

பியூஷ் கோயல் குற்றச்சாட்டுக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலடி!

பிசிசிஐ தலைவர் பதவி விலகல்: கங்குலியின் அடுத்த டார்கெட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share