புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே… காதலியை கரம்பிடித்த பிரேம்ஜி

Published On:

| By Kavi

நடிகர் பிரேம்ஜிக்கு இன்று (ஜூன் 9) காலை திருத்தணியில் திருமணம் நடைபெற்றது.

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர். வல்லவன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

‘’என்ன கொடுமை சார் இது’’ என்ற வசனம் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைபெற்றார் பிரேம்ஜி.

40 வயதை கடந்தும் பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளாத நிலையில், அவர் எப்போது திருமணம் செய்துகொள்வார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

சமீபத்தில் அவரது திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலானது.

இதுதொடர்பாக அவரது அண்ணனும் இயக்குநருமான வெங்கட் பிரபு, “எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. “பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?” “சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?” இதை எல்லாவற்றையும் விட, “பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?” என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்!

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தசூழலில் நேற்று பிரேம்ஜியின் நிச்சயதார்த்தம் திருத்தணியில் நடைபெற்ற நிலையில், இன்று காலை திருத்தணி முருகன் கோயிலில் தனது காதலி இந்துவை திருமணம் செய்துகொண்டார் பிரேம்ஜி.

பிரேம்ஜியின் மனைவி இந்து சேலத்தைச் சேர்ந்தவர் என்றும் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும், அவர் விருப்பப்படி திருத்தணியில் திருமணம் நடந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

புதுமண தம்பதியினருக்கு திரையுலகில் இருந்து வாழ்த்து மழை குவிந்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

”என்னை யாரும் அழைக்காதீர்கள்” : நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடிதம்!

கனிமொழிக்கு டெல்லி பதவி! உதயநிதி துணை முதல்வர்! திரும்பும் 2009 ஃபார்முலா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share