தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல் !
தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்தப் பட விழா, உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை வழங்கும் முயற்சி என்கிறார்கள்.
நடிகர் பிரபாஸின் ஆதரவோடு நடக்கும் முயற்சி இது.
“தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்,” என்று கூறும் பிரபாஸ் தொடர்ந்து, ”ஒவ்வொரு முயற்சியும் ஒரு ஆரம்ப வாய்ப்புக்கு தகுதியானது.. ஒவ்வொரு கனவுக் கதைக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டியது அவசியம். இந்த சர்வதேச குறும்பட திரைப்பட விழா உலகம் முழுவதிலிருந்தும் கதை சொல்லிகளை தங்கள் பயணத்தைத் தொடங்க அழைக்கிறது.”என்று கூறி இருக்கிறார்.
2 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட குறும்படங்கள், எந்த ஜானரிலும், பங்கேற்கலாம். பார்வையாளர்களின் வாக்குகள், லைக்ஸ் மற்றும் ரேட்டிங்ஸ் அடிப்படையில் முதல் மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதே சமயம், சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு படமும், புதிய திறமைகளை தேடி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை பெறும்.
இந்தப் பட விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு அறிவுரை கூறும் திரைப்பட இயக்குனர்கள் பலரும், “ஒரு திரைப்பட இயக்குநராக உருவாக குறும்படம் எடுப்பதே மிக முக்கியமான அம்சம். காகிதத்தில் நீங்கள் எழுதுவது மற்றும் திரையில் நீங்கள் உருவாக்குவது — இரண்டும் முற்றிலும் வேறு வேறு யதார்த்தங்கள். சாதிக்க ஆசைப்படும் இயக்குநர்களுக்கு இது சரியான நேரம். பதிவு செய்து இதை முழுமையாக பயன்படுத்துங்கள்.
YouTube-ல் வெளியிடப்படும் குறும்படம் மூலமாகக் கூட ஒரு தயாரிப்பாளர் கிடைக்கலாம்.. ஒரு திரைப்பட பள்ளியை விட, உங்கள் வேலை மற்றும் அதைப் பற்றிய உங்கள் புரிதலே மிகவும் முக்கியம். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி, உங்கள் படங்களை சமர்ப்பித்து, சிறந்ததை சாதிக்க வேண்டும்.” என்று உருவேற்றுவதோடு,
”க்விக் டிவியின் ஜூரி 15 சிறந்த திரைப்படக் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையாக நிதியளிக்கப்படும் 90 நிமிட திரைப்பட ஸ்கிரிப்ட், முழு தயாரிப்பு ஆதரவு மற்றும் க்விக் டிவி தளத்தில் உலகளாவிய பிரீமியர் வழங்கப்படும். இதன் மூலம் 15 படைப்பாளிகள் குறும்படங்களில் இருந்து நேரடியாக தொழில்முறை திரைப்பட இயக்குநர்களாக, சர்வதேச அளவில் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்” என்றும் இந்த குறும்படக் குழு கூறுகிறது.
தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் செய்தித் தொடர்பாளர் ” பார்வையாளர்களை கவரும் அடுத்த இயக்குநர் எங்கிருந்தும் வரலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தளம் ஒவ்வொரு கதை சொல்லிக்கும் ஒரு குரல், ஒரு மேடை மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களால் காணப்படும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.” என்கிறார்.
விரும்புவோர் சொடுக்கவும்.. https://www.thescriptcraft.com/register/director
— ராஜ திருமகன்
