ஜூலை 12-ஆம் தேதி வெளியாகவுள்ள டீன்ஸ் படத்தின் டிக்கெட் ஒரு சில நாட்களுக்கு ரூ.100 கட்டணத்தில் விற்கப்படும் என்று அப்படத்தின் இயக்குனர் பார்த்திபன் இன்று (ஜூலை 8) தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவரது இயக்கத்தில் குழந்தை நட்சத்திரங்களை மையமாக வைத்து டீன்ஸ் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
பயோஸ்கோப் ட்ரீம்ஸ் மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து டீன்ஸ் திரைப்படத்தை தயாரித்துள்ளன.
இப்படம் வருகிற ஜூலை 12-ஆம் தேதி இந்தியன் 2 படத்தோடு மோதுகிறது. இந்தநிலையில், டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் சிவபிரசாத் ரூ.40 லட்சத்தை வாங்கிவிட்டு கிராபிக்ஸ் பணிகளை முடிக்காமல் தன்னை ஏமாற்றியதாக கோவை பந்தயசாலை காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
ஒருவழியாக டீன்ஸ் படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்த நிலையில், ரிலீஸுக்காக படம் தயாராக இருக்கிறது.
இந்தநிலையில், படம் பார்க்க வரும் ஆடியன்ஸை கவர்ந்திழுப்பதற்காக பார்த்திபன் ஒரு சூப்பர் ஆஃபரை அறிவித்துள்ளார்.
அதாவது டீன்ஸ் திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஒரு சில நாட்களுக்கு ரூ.100 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் நட்டம் எதுவும் இல்லை. வசதி குறைவானவர்கள் காண வசதியாக இருப்பதன் நாட்டமே என்றும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜி மனு : அமலாக்கத் துறைக்கு உத்தரவு!
ஏரி, குளங்களில் இருந்து இலவசமாக மண் எடுக்க அனுமதி: விண்ணப்பிப்பது எப்படி?