“டீன்ஸ் படத்திற்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா, நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன்” என்று இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் இயக்கியுள்ள ‘டீன்ஸ்’ படம் கடந்த ஜூலை 12-ல் திரையரங்குகளில் வெளியானது. குழந்தைகளை மையமாக கொண்ட இப்படம், சாகச த்ரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
திரைப்பட தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, வெளியீடு, படத்தை விளம்பரப்படுத்துவதில் வித்தியாசமான அணுகுமுறைகளை கையாளக்கூடியவர் பார்த்திபன்.
இந்தியன்-2 வெளியான ஜூலை 12 அன்று ‘டீன்ஸ்’ படம் வெளியாகும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியதன் மூலம் டீன்ஸ் படத்திற்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைத்தது.
இந்தநிலையில், டீன்ஸ் படம் குறித்து இயக்குநர் பார்த்திபன் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “சத்தியமா சொல்றேன், TEENZ-க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா, நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன்.
இப்ப நீங்க எல்லாரும் ஒருமுகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே. இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க.
அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும்.பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு நன்றி. வரவிருக்கும் தூய்மையான வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காவிரி விவகாரம்: துரைமுருகன் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்!