நடிகர் முகேஷ் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவரின் தாயிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
நடிகர் முகேஷ் நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் ஆவார். ஓரிரு தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவாக உள்ள இவர் மீது கேரள நடிகைகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.
ஜூனியர் ஆர்டிஸ்டான சந்தியா என்பவர், முகேஷ் தனது தோழியின் தாயாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். எனது தோழியை தேடி அவரது வீட்டுக்கு முகேஷ் சென்றுள்ளார். அப்போது, தோழி வீட்டில் இல்லை. அங்கிருந்த அவரின் தாயாரிடத்தில் முகேஷ் தவறாக நடந்து கொண்டுள்ளார். தோழியின் தாயார் நடிகர் முகேஷை திட்டி வீட்டை விட்டு துரத்தியுள்ளார் என்றும் சந்தியா கூறியுள்ளார்.
அதே போல நடிகை மினு முனீரும் முகேஷ் மீது அட்ஜெஸ்ட்மென்ட் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளர் தேஸ் ஜோசப்பும் மீ டுவில் முகேஷ் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் , முகேஷ் மீது போலீசில் புகார் அளிக்கப்படவில்லை.
நடிகர் முகேஷ் மீது கட்சி ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, கேரள திரைத்துறை தொடர்பான கொள்கைகளை வகுக்கும் குழுவில் முகேஷ் இடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரைவில் ஹேமா கமிட்டியின் அறிக்கையில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை மார்க்சிஸ்ட் கட்சி விவாதிக்கவுள்ளதாக தெரிகிறது. தற்போது 68 வயதான முகேஷ் 1988 ஆம் ஆண்டு நடிகை சரிதாவை திருமணம் செய்தார். 2011 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். 2013 ஆம் ஆண்டு மேதில் தேவிகா என்பவரை முகேஷ் திருமணம் செய்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
Share Market: செபி விதித்த தடையால் தொடர் சரிவில் ரிலையன்ஸ் பங்குகள்!
இன்று கூடியதா தங்கத்தின் விலை? படித்து தெரிந்துகொள்ளுங்கள்!
.