“திராவிட மாடல் அரசு அறிவையும், கல்வியையும் மூலதனமா நம்புது” – நடிகர் மணிகண்டன்

Published On:

| By Pandeeswari Gurusamy

திராவிட மாடல் அரசு அறிவையும், கல்வியையும் மூலதனமாக நம்புகிறது என நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் ‘உலகம் உங்கள் கையில்’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் நடிகர் மணிகண்டன் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியில் பேசிய மணிகண்டன் தனது திறனை வெளிப்படுத்த இருக்கும் வசதி வாய்ப்புகள் கிடைக்காத ஒரு மனிதனின் சோகத்தை விட இந்த உலகத்தில் வேறு பெரிய சோகம் கிடையாது. எவ்வளவோ திறமைகள் இருந்தும் அதனை வெளிப்படுத்த சரியான வசதி வாய்ப்புகள் இல்லாத எத்தனையோ பேரை நான் ஆரம்ப நாட்களில் பார்த்துள்ளேன். இனிமேல் அது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்ற நிலையை இங்குள்ள முத்தான சத்தான திட்டங்கள் உருவாக்கியுள்ளன. அதற்காக தமிழக அரசுக்கு மிகப் பெரிய நன்றிகள்.

முக்கியமாக பள்ளிக்கல்வித்துறையில் நான் நிறைய திட்டங்களை பார்த்துள்ளேன். உலக வரலாற்றில் ஒரு அரசு மூலதனமாக எதை நம்புகிறது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. பயம், மிரட்டல், பணம், பக்தி, என உலக அரசுகள் பலவற்றை நம்புகிறது. ஆனால் திராவிட மாடல் அரசு அறிவையும், கல்வியையும் மூலதனமாக நம்புகிறது.

ADVERTISEMENT

இது மிகப் பெரிய மூலதனம் என்பதற்கு சான்றாக இன்று விதைக்கும் விதைகளின் பலனை எதிர்காலத்தில் நிச்சயமாக பார்ப்போம் என்று தெரிவித்தார்

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share