நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து நடிகை கஸ்தூரி சிறையில் இருந்து வெளியே வந்தார்.
தெலுங்கர்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்த நிலையில், கடந்த நவம்பர் 16ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சென்னை அழைத்து வரப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கியது.
மாலை நேரத்தில் ஜாமீன் உத்தரவானதால், நீதிமன்றத்தில் surety வழங்குவதற்கான நடைமுறையை முடிக்கவும், அதன் நகலை புழல் சிறையில் வழங்கவும் மேலும் சில மணி நேரம் கால தாமதம் ஆனது.
இதனால் நேற்று கஸ்தூரியால் சிறையில் இருந்து வெளியே வரமுடியவில்லை.
இந்நிலையில் அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்த பிறகு இன்று (நவம்பர் 21) மாலை கஸ்தூரி சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கஸ்தூரி, “என்னுடைய குடும்பத்தை பார்த்துக்கொண்ட நண்பர்களுக்கும், என்னுடைய வழக்கறிஞர்களுக்கும், அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்காக ஆதரவு தந்த அனைத்து தலைவர்களுக்கும், ஆந்திர – தெலங்கானா மக்களுக்கு மிகப்பெரிய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புழல் சிறையில் என்னை நன்றாக நடத்தியவர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
’பாலிவுட் படங்கள் போர் அடிக்கின்றன…!’ – இயக்குநர் பால்கி
“புதிய வழிமுறை- இவர்களுக்கு சொத்துவரியை ஏற்றவில்லை” : அமைச்சர் நேரு
Comments are closed.