ADVERTISEMENT

ஆழ்வார்க்கடியானா? குசேலனா?: புது கெட்-அப்!

Published On:

| By Balaji

மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயராம் சமீபத்தில் இணைந்தார்.

தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் ஜெயராம், கார்த்தி மற்றும் ஜெயம் ரவியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியிருந்தார். அந்தப் புகைப்படத்தில் மிகவும் எடை குறைந்த மெலிந்த தோற்றத்தில் அவர் காணப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவருடைய தோற்றத்தை வைத்து பார்க்கும்பொழுது, ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதே நேரத்தில் “நமோ” என்ற சமஸ்க்ரித திரைப்படத்தில் குசேலன் பாத்திரத்தின் கெட்-அப்பிற்காகத் தான் அவர் எடைகுறைத்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஜெயராம் நடிக்கும் “நமோ” படத்தின் பர்ஸ்ட்-லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தில் குசேலன் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள தகவல் உறுதிபடுத்தப்பட்டாலும், பொன்னியின் செல்வனில் எந்த கதாபாத்திரத்தில் ஜெயராம் தோன்றுகிறார் என்ற சந்தேகம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

ADVERTISEMENT

ஜெயராம் கடைசியாக தமிழில் 2015-இல் வெளியான உத்தமவில்லன் திரைப்படத்தில் தோன்றியிருந்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் பொன்னியின் செல்வன் மூலமாக மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share