நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்!

Published On:

| By christopher

Actor Goundamani's wife passes away at age 67

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் இன்று (மே 5) காலை காலமானார். அவருக்கு வயது 67. Actor Goundamani’s wife passes away at age 67

தமிழ் சினிமா கண்ட சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருபவர் கவுண்டமணி.

ADVERTISEMENT

இவர் சாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு செல்வி, சுமித்ரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

கவுண்டமணியின் மனைவி சாந்தி கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 மணி அளவில் சாந்தி உயிரிழந்தார்.

ADVERTISEMENT

அவரது உடல் தேனாம்பேட்டையில் எச்.ஐ.இ.டி கல்லூரி எதிரே அமைந்துள்ள கவுண்டமணியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி, சோகத்தில் இருக்கும் கவுண்டமணிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

உயிரிழந்த சாந்தியின் உடல் நாளை அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share