கொல்வதற்கு முன், தனது ரசிகரின் பிரைவேட் பார்ட்ஸ் பகுதியில் கரண்ட் ஷாக் கொடுத்ததாக நடிகர் தர்ஷன் மீது பகீர் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா சாமி. 33 வயதாகும் இவரை கடந்த ஜூன் 9 ஆம் தேதி காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், காமாட்சிபாளையம் பகுதியில் உடலில் காயங்களுடன் ரேணுகாசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில்தான் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
கொல்லப்பட்ட ரேணுகா சாமியும் தர்ஷனின் மிகத் தீவிரமான ரசிகர்தான். தர்ஷனுக்கு 2003ஆம் ஆண்டில் அவரது உறவினரான விஜயலக்ஷ்மியுடன் திருமணமாகிவிட்டது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில், தர்ஷன் பவித்ரா என்ற கன்னட நடிகையுடன் பழகிவந்திருக்கிறார். இதற்கு விஜயலக்ஷ்மி எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.
இதனால், தர்ஷனை விட்டு பிரிந்து செல்லும்படி நடிகை பவித்ராவுக்கு ரேணுகாசாமி தொடர்ந்து, மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இது குறித்து, பவித்ரா தர்ஷனிடத்தில் கூறியுள்ளார். இதையடுத்து,ரசிகர் மன்ற தலைவர் மூலம் தர்ஷன் தனது நண்பர் வீட்டுக்கு ரேணுகாசாமியை அழைத்து வர வைத்துள்ளார்.
பின்னர், அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளனர். கொடூரத்தின் உச்சக்கட்டமாக அவரின் பிரைவேட் பார்ட்ஸ் பகுதியில் கரண்ட் ஷாக் கொடுத்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்த தர்ஷன், பவித்ரா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ரேணுகாசாமியை கொல்வதற்கு முன்பு அவரை கொலையாளிகள் புகைப்படங்களும் எடுத்துள்ளனர். ஒரு புகைப்படத்தில் உடலில் சட்டை இல்லாமல் ரேணுகாசாமி கதறி அழுதபடி உள்ளார். ரேணுகாசாமியின் பின்னால் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்: மோடி அறிவிப்பு!
பெற்றோருடன் இணக்கம்…மனைவியுடன் நெருக்கம்… விஜய் குடும்பத்துடன் படம் பார்த்த பின்னணி!