”குடிக்க வேண்டாமென்று சொல்லும் தகுதி எனக்கில்லை”: மரணத்துக்கு முன் பிஜிலி ரமேஷ் உருக்கம்!

Published On:

| By Kumaresan M

சமூக வலைதளங்களில் அதிக அளவு ரசிகர்களை பெற்றவர் பிஜிலி ரமேஷ். பிளாக் ஷீப் யூட்யூப் சேனலில் ஒரு தொடர் போல் வெளிவந்த fun பன்றோம் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் 2019 ஆம் ஆண்டு வெளியான இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஜெயம் ரவி நடித்திருந்த கோமாளி படத்தில் வாட்ச்மேன் வேடத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  ஒரு கட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிஜிலி ரமேஷ் அதில் இருந்து வெளி வர முடியாமல் தவித்தார்.  இதில் கல்லீரல் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது விஜே சித்து உள்ளிட்ட சிலர் அவருக்கு உதவினர். தொடர்ந்து வீடு திரும்பிய ரமேஷுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

கால்கள் வயிறு  வீங்கி நடக்கவும் சாப்பிடவும் கூட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அவரது மனைவி பிஜிலி ரமேஷின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு பிஜிலி ரமேஷ்  மரணம் அடைந்தார். பிஜிலி ரமேஷுக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

தற்போது, மரணத்திற்கு முன்பாக பிஜிலி ரமேஷ் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

என்ன ஆனாலும் அழுகாதன்னு சொல்லிட்டார் ! - Bijili ramesh last words | RIP | Minnambalam plus

அந்த வீடியோவில் பிஜிலி ரமேஷ், தனது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. வண்டி ஓடும் வரை ஓடும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குடிக்கிறவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு எனக்கு யோக்கியதை கிடையாது.. அந்தத் தகுதியை தான்  இழந்து விட்டதாகவும் உருக்கமாக கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

இன்று விலை கூடியதா தங்கத்தின் விலை? படித்து தெரிந்துகொள்ளுங்கள்!

விஜய் கட்சி தொடங்க ராகுல் தான் காரணம் : விஜயதாரணி பேச்சு… 2009ல் நடந்தது என்ன?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share