ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நற்பெயரை பெற்றவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேஷன்.
இவர் இயக்கிய எல்லா படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், இவரது இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மான்ஸ்டர் படம் மட்டும் தான் மிக பெரிய வெற்றியை அவருக்கு பெற்றுத் தந்தது.
இந்நிலையில் தற்போது நடிகர் அதர்வாவை வைத்து ஒரு புதிய ஆக்சன் படத்தை இயக்க நெல்சன் வெங்கடேஷன் தயாராகிவிட்டார். அந்த படத்திற்கு ‘DNA’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நிமிஷா சஞ்ஜயன் நடிக்கிறார்.
Presenting the title look of @atharvaaMurali & #NimishaSajayan starring #DNAmovie 🧬
Directed by @nelsonvenkat
The shooting has officially kicked off. Brace yourself for an crime action drama@Ambethkumarmla@Filmmaker2015 @editorsabu @amudhanPriyan @nagarajandir pic.twitter.com/5T8io8BpkD— Olympia Movies (@Olympiamovis) October 11, 2023
டாடா படத்தை தயாரித்த அம்பேத் குமார் தான் DNA படத்தை தயாரிக்கிறார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாக உள்ள DNA படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ICC WorldCup: டிரெண்டிங்கில் விராட்கோலி – நவீன் உல் ஹக்… மீண்டும் மோதல்?
