அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் பா.ரஞ்சித். அதன் பிறகு நடிகர் ரஜினி அவர்களுடன் இணைந்து பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, காலா ஆகிய இரண்டு திரைப்படங்களும் மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படம் உருவாகி இருக்கிறது. தங்கலான் படத்தின் ரிலீஸ் குறித்த முறையான அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில் தற்போது பா.ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் பா ரஞ்சித்தும் நடிகர் ஆர்யாவும் சார்பட்டா 2 படத்திற்காக இணைவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சார்பட்டா 2 படத்திற்கு முன்பாக பா.ரஞ்சித் இயக்க இருக்கும் புதிய படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார் என்றால் அப்போது அந்த படத்தின் ஹீரோ யார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்ப தொடங்க, தற்போது அந்த படத்தின் ஹீரோ அட்டகத்தி தினேஷ் அவர்கள் தான் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
தங்கலான் படத்தின் ரிலீசுக்கு பிறகு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : இந்தியா கூட்டணி கூட்டம் முதல் இந்தியா-அயர்லாந்து போட்டி வரை!
T20 World Cup 2024: வெற்றி பெரும் அணிக்கு பரிசுத்தொகை இவ்வளவு கோடியா?