தக் லைஃப்ல ஏன் நடிச்சேன்? – போட்டுடைத்த இந்தி நடிகர்!

Published On:

| By uthay Padagalingam

actor ali fazal open up why i was act in thuglife

’மிர்ஸாபூர்’ வெப்சீரிஸ் வாயிலாக ரசிகர்களின் அபிமானத்தை அள்ளியவர் நடிகர் அலி ஃபசல். ‘3 இடியட்ஸ்’ தொடங்கி ‘காமோஷியான்’, ‘ஃபக்ரி’, ‘ஃபக்ரி ரிட்டர்ன்ஸ்’ உட்படச் சில வெற்றிப் படங்களில் இவர் ஒரு அங்கமாக இருந்திருக்கிறார். ‘தக் லைஃப்’ படத்தில் வில்லனாக நடித்தவர் இவரே. அதில் மகேஷ் மஞ்ச்ரேகரின் சகோதரி மகனாகத் தோன்றியிருப்பார். actor ali fazal open up why i was act in thuglife

‘தக் லைஃப்’ படத்தின் தோல்வி, ஓடிடி வெளியீடு குறித்துச் சமீபத்தில் தனது பேட்டியொன்றில் சில தகவல்களைத் தெரிவித்திருக்கிறார் அலி ஃபசல்.

ADVERTISEMENT

“அந்தப் படத்துல ஏன் நடிச்சேன்னு நிறைய பேர் கேட்டாங்க. உண்மையைச் சொல்லணும்னா, மணி சாரோட உலகத்துல நான் இருக்கணும்னு நினைச்சேன். அவ்வளவுதான்.

அது ரொம்ப சின்ன பாத்திரம். ஆனாலும் வாய்ப்பு வந்தப்போ, ‘ஓகே’ன்னு சொன்னேன். மணி சார் சொன்ன மாதிரியே நடிச்சேன். ஆனாலும், அந்த படம் பாக்ஸ் ஆபீஸ்ல வெற்றி பெறலை.

ADVERTISEMENT

அதேநேரத்துல தமிழ் திரைத்துறையில எனக்கான வரவேற்பு ரொம்ப இனிமையா அமைஞ்சது. மணி சார், கமல் ஹாசன் சார் எல்லோரும் ரொம்ப இனிமையா பழகுனாங்க” என்றிருக்கிறார்.

இயக்குனர் மணி ரத்னம், ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் உடன் மீண்டும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் அலி ஃபசல். வேறு வாய்ப்புகள் அமைந்தால் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

ADVERTISEMENT

சரி, தனது ரசிகர்கள் எழுப்புகிற கேள்விகளுக்கு அலி ஃபசல் சொல்லும் பதில் என்ன?

“இப்போதான் எந்த காட்சிகள் ’தக் லைஃப்’ படத்துல வந்திருக்கு. எதெல்லாம் பைனல் கட்ல இல்லைங்கற விஷயம் தெரிய வந்திருக்கு. அதுக்காக, மணி சாரோட பார்வையை என்னால குறை சொல்ல முடியாது.

படத்தயாரிப்பின்போது நிறைய மாற்றங்கள் நடந்திருக்குன்னு புரிஞ்சுக்க முடியாது. உண்மைய சொல்லணும்னா, என்னைப் பொறுத்தவரை இந்த விஷயம் முடிஞ்சுபோச்சு” என்று பதிலளித்திருக்கிறார்.

‘அலி ஃபசல் மாதிரியான நடிகர்களை ஏன் இப்படி ஸ்கிரீன்ல காட்டியிருக்காங்க’ என்று ‘தக் லைஃப்’ பார்த்து அங்கலாய்த்தவர்களுக்கு இந்தப் பதில் போதுமானதாக இருக்கும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share