நடிகர் அஜித்குமாருக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சில மருத்துவ பரிசோதனைகள் இன்று (ஏப்ரல் 30) மேற்கொள்ளப்பட்டுள்ளது. actor ajith admitted in apollo
நடிப்பு, கார் ரேஸ், பைக் ரேஸ் என தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக்கொள்கிறவர் நடிகர் அஜித்குமார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அஜித் நடிப்பில் அடுத்தடுத்து இரு திரைப்படங்கள் இந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்தநிலையில், திரைத்துறை மற்றும் சர்வதேச கார் பந்தயத்தில் சிறந்து விளங்கியதற்காக நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. டெல்லியில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அஜித்துக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அஜித் தனது மனைவி ஷாலினி, மகன், மகளுடன் கலந்துகொண்டார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித்குமார், “விரைவில் நான் உங்களை சந்திக்கிறேன்” என்று பதிலளித்துவிட்டு சென்றார்.
ஷாலினி பேசுகையில், “இது மகிழ்ச்சியான தருணம். பெருமையாக இருக்கிறது” என்றார்.
இந்தநிலையில், நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். actor ajith admitted in apollo
வழக்கமான ஜென்ரல் செக்-அப்-க்கு சென்றிருக்கிறார் என்றும் அவருக்கு ஒரு சில பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. எனினும், அஜித் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
