விஷ்ணு விஷால் உடன் அமீர்கான்

Published On:

| By uthay Padagalingam

‘வெண்ணிலா கபடிக் குழு’ தொடங்கி ‘குள்ளநரிக்கூட்டம்’, ‘நீர்ப்பறவை’, ‘ராட்சசன்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற படங்களின் வழியே தமிழ் திரையுலகில் தனித்துவமான நாயகனாக விளங்குபவர் விஷ்ணு விஷால்.

முதல் மனைவி ரஜனியை விவாகரத்து செய்த பின்னர், சில ஆண்டுகளுக்குப் பிறகு பாட்மிண்டன் வீராங்கனையான ஜ்வாலா கட்டாவைத் திருமணம் செய்தார். சமீபத்தில் இந்த தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்தது. Actor Aamir Khan with Vishnu Vishal

ADVERTISEMENT

இந்த குழந்தைக்கு ‘மிரா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் இந்தி நடிகர் அமீர்கான். மிரா என்றால் அளவு கடந்த அன்பு, அமைதி என்று பொருளாம்.

விஷ்ணு விஷால் – ஜ்வாலாவின் குடும்ப நண்பராகத் திகழும் அமீர்கான், சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது அவர்களது வீட்டில் தங்கியிருந்தது நாம் அறிந்ததே. மேலும், சென்னை வரும்போதெல்லாம் அவர் இக்குடும்பத்தினரைச் சென்று பார்ப்பார் என்ற தகவல் அப்போது புதிதாக இருந்தது.

ADVERTISEMENT

அந்த நிகழ்வை நினைவூட்டும்விதமாக, மீண்டும் அத்தம்பதியர் குழந்தையின் பெயர்சூட்டு விழாவில் பங்கேற்றிருக்கிறார் அமீர்கான். ஹைதராபாதில் இருந்து வந்து இவ்விழாவில் பங்கேற்றதற்காக, அவருக்குத் தனது நன்றியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.  Actor Aamir Khan with Vishnu Vishal

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share