நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி கோவாவில் நடைபெற்றது.
கடந்த 15 வருடங்களாக தனது காதலை ரகசியமாக வைத்து இருந்த கீர்த்தி சுரேஷ், சில வாரங்களுக்கு முன்பு தனது காதலர் யார் என்பதை அறிவித்தார்.
திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் தனது முதல் ஹிந்தி படமான பேபி ஜான் ப்ரோமோஷனில் பங்கேற்றார். மும்பையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சிவப்பு நிற உடையில் அட்டகாசமாக காணப்பட்டார்.

பட விழாவில் பங்கேற்றுவிட்டு கீர்த்தி சுரேஷ் பிரபல ஹோட்டலுக்கு டின்னர் சாப்பிட சென்றார். ஆனால், அவருடன் கணவர் ஆண்டனி வரவில்லை. தனியாகவே வந்திருந்தார். அப்போது கீர்த்தின் கழுத்தில் வேறு எந்த நகையும் இல்லை. கணவர் கட்டிய தாலிக்கயிறு மட்டும் தனியாக பளீரென்று தெரிந்தது.
கீர்த்தியின் திருமணத்தில் நடிகர் விஜய், டிடி, அட்லீ, திரிஷா ஆகியோர் கலந்து கொண்டிருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.
நடிகர் விஜய்யின் மேலாளராக இருக்கும் ஜெகதீஷ் பழனிசாமியும் கீர்த்தியின் திருமணத்தில் கலந்துகொண்டார்.
ஜெகதீஷ் பழனிசாமிதான் கீர்த்திக்கும் ஆண்டனிக்கும் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

கீர்த்தியை தனது தங்கை என்று குறிப்பிட்டுள்ள ஜெகதீஷ், ‘கீர்த்தியை திருமணம் செய்பவர் தான் அதிர்ஷ்டசாலி என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அது ஆண்டனி தட்டில் என்று தெரிந்ததும் கீர்த்தி தான் அதிர்ஷ்டசாலி ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெகதீஷின் இந்தப் பதிவுக்கு பதில் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷின் கணவர் ஆண்டனி தட்டில், “உங்களைப் போன்ற ஒரு சகோதரர் எங்கள் வாழ்வில் கிடைத்ததற்கு நாங்கள் தான் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் இல்லாமல் எதுவும் இல்லை அண்ணா. திருமணத்தில் முழுவதுமாக உடன் இருந்ததற்கும் மிக்க நன்றி” என்று பதிலுக்கு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
மண்ணே இல்லாமல் வளரும் காய்கறி… நடிகை சமந்தா செய்த காரியம்!
விஜய் – திரிஷாவை விமான நிலையத்தில் போட்டோ எடுத்தது யார்? – மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!