ADVERTISEMENT

உங்கள் குரலுக்கு நான் அடிமை… வாய்ஸ் கன்ட்ரோலில் புதிய ஸ்மார்ட் டிவி!

Published On:

| By Monisha

acer H pro series smart tv

கேமிங் பயன்பாட்டுக்காக இளைஞர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பை பெற்றிருக்கும் நிறுவனமாக இருக்கிறது ஏசர். அதன் லேப்டாப், மொபைல் போன்ற சாதனங்களுக்கான மவுசு சந்தையில் ஒருபோதும் குறைந்ததில்லை. அந்த வகையில் அடுத்ததாக வரிசையில் இணைந்துள்ளதுதான் ஏசரின் H pro ரக தொலைக்காட்சி.

தியேட்டரில் படம் பார்ப்பது போன்ற உணர்வு வீட்டில் டிவியில் பார்க்கும் போதும் கிடைக்க வேண்டும் என gadget freakers-கள் அனைவரும் விரும்புவதுண்டு. ஆனால் சந்தையில் அதுபோன்ற டிவிக்கள் கிடைத்தாலும், கூடுதலாக ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்டவற்றையும் வாங்க வேண்டிய சூழலே இருக்கும்.

ADVERTISEMENT

ஆனால் acer-ன் இந்த H Pro வகை டிவியில் அந்த தேவைகள் எதுவும் ஏற்படாது என இந்த்கல் டெக்னாலஜிஸின் நிறுவனரும் சி.இ.ஓவுமான ஆனந்த் துபே கூறியிருக்கிறார்.

இந்தியாவில் acer-ன் H Pro சீரிஸ்சில் 3 வகையான டிவிக்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதுவும் 26,499 ரூபாய் மதிப்பில் அனைத்து அம்சங்களும் பக்காவாக பொருந்தும் அளவுக்கு ஒரே டிவியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை என்னென்ன என்பதை காணலாம்.

ADVERTISEMENT

43, 50 மற்றும் 55 இன்ச் என 3 அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஏசரின் H Pro சீரிஸ் டிவிக்களில் 76 வாட்ஸ் dolby atmos ஸ்பீக்கர் வசதியில் dural tweeter, dual amplifier மற்றும் dual woofer அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பீக்கர் அம்சம் முழுக்க முழுக்க தியேட்டரில் படம் பார்ப்பதை போன்ற ஃபீலை நிச்சயம் கொடுக்க தவறாது.

acer H pro series smart tv

ADVERTISEMENT

பயனர்களுக்கு ஏற்றவாறு 4K LED டிவியாக இருக்கும் இந்த acer H Pro சீரிஸில் ஆண்ட்ராய்டின் சமீபத்திய வெர்ஷனான 11 இயங்குதளத்துடன் கூகுள் டிவியாக வந்திருக்கிறது. பெரிய டிஸ்ப்ளே கொண்ட டிவியாக இருப்பதால் கூகுள் மீட் மூலம் வீடியோ காலில் பேசுவதற்கும் ஏதுவாக இருக்கும். மேலும் ரிமோட்களில் netflix, amazon prime மற்றும் hotstar போன்ற ott தளங்களுக்கான தனித்தனி பட்டன்கள் கொடுக்கப்பட்டதோடு கூடுதலாக கூகுள் அசிஸ்டென்ட்-க்கான பட்டனும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது போல மற்ற நிறுவன டிவிக்களிலும்தான் கொடுக்கிறார்கள் என யோசிக்கலாம். ஆனால் acer-ன் இந்த H Pro ஸ்மார்ட் டிவியை ரிமோட்டில் உள்ள வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் மிக சுலபமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் மெனக்கெட்டு டைப் செய்யும் வேலையும் மிச்சமாகும்.

மேலும் HDMI 2.1, dual band, wifi, ethernet, 5.0 bluetooth , USB 3.0, Chromecast வசதிகளோடு 64bit quadcore ப்ரோசஸர் கொண்ட இந்த டிவியில் A55 சிப் உடன் 2GB RAM பொருத்தப்பட்டுள்ளதோடு, 16GB-க்கு சேமிப்பு திறனும் ஏசர் எச் ப்ரோ சீரிஸ் டிவியில் உள்ளது. இதனால் செயலிகளை டவுன்லோடு செய்து பயன்படுத்துவதில் எந்த தடங்கலும் இருக்காது.

ஒரு வருடத்துக்கான விரிவான வாரன்ட்டியும் , 2 ஆண்டுகளுக்கான பேனல் வாரன்ட்டியும் கொண்ட இந்த acer H Pro சீரிஸ் டிவியின் 43 இன்ச் ரூ.26,499க்கும், 50 இன்ச் ரூ.32,999க்கும், 55 இன்ச் ரூ.38,499க்கும் விற்கப்படுகிறது.

பவித்ரா பலராமன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காவி நிற வந்தே பாரத் – காரணம் என்ன?: அமைச்சர் விளக்கம்!

திமுக பற்றி மோடி அவதூறு பரப்புவது சரியா? – ஸ்டாலின் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share