வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் படங்களில் மிக முக்கியமானது Cars சீரீஸ் படங்கள். இதுவரை வெளிவந்த Cars படங்களின் இரண்டு பாகமும் சூப்பர் டூப்பர் ஹிட். எல்லா வகையான சாகசங்களையும் இரண்டு பாகங்களில் செய்துவிட்ட Cars தொடரின் கதாநாயகனான லைட்னிங் மெக்குயின், மூன்றாவது பாகத்தில் என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பை மேலும் கிளறிவிட்டது, Cars 3-யின் முதல் டீஸர்.
ரேஸ் டிராக்கில் தலைக்குப்புற பல்டி அடித்து லைட்னிங் மெக்குயின் நொறுங்கிவிழுவது போல ஒரு டீஸரை வெளியிட்டிருக்க வேண்டாமே என டிஸ்னிக்கு பலர் கடிதமெழுதும் அளவுக்கு, லைட்னிங் மெக்குயின் மீது பாசம் வைத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களது மனவருத்தத்தைப் போக்கும் விதத்தில் இரண்டாவது டீஸரில் அப்கிரேடட் லைட்னிங் மெக்குயினை காட்டியிருக்கிறார்கள்.

டீஸரைப் பார்த்ததும், 2.0 என எழுதப்பட்ட கறுப்பு நிற கார் தான் லைட்னிங் மெக்குயின் என நினைத்தால், அதன்பிறகு பிஸ்டன் கோப்பையை வென்றதைச் சொல்லும் டேட்டூவுடன் லைட்னிங் மெக்குயின் கார், தனது டிரேட்மார்க் சிகப்பு நிறத்துடன் அப்கிரேடடாக வருகிறது. அப்படியென்றால், முதலில் வருகின்ற கறுப்பு நிற 2.0 என எழுதப்பட்ட கார் யார்? என்ற கேள்வி உருவாகிறது. 2.0 என எழுதியிருக்கிறதென்றால் இதன் முதல் வெர்ஷன் ஏற்கனவே இருந்திருக்கவேண்டுமே என்ற சந்தேகம் உருவாகும்போது **ஜேக்சன் ஸ்டார்ம் அறிமுகம்** என டைட்டில் கார்டு போட்டு நம்மை மேலும் குழப்புகிறார்கள். ஜேக்சன் ஸ்டார்முடன் கிரஸ் ராமிரெஸ் என்ற மஞ்சள் நிற பெண் காரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். கடைசியாக அப்கிரேடட் லைட்னிங் மெக்குயின், புதுப்பொலிவுடன் சாகசங்கள் பல செய்ய கிளம்புகிறது.

Cars 3-யின் இரண்டாவது டீஸரையும் முதல் டீஸரையும் சேர்த்துப் பார்க்கும்போது, எதிர்பாராத விபத்தால் ரேஸ் டிராக்கிலிருந்து வெளியேற்றப்படும் லைட்னிங் மெக்குயின், புதிய டீமான ஜேக்சன் ஸ்டார்ம் மற்றும் கிரஸ் ராமிரெஸ் ஆகிய இருவருடன் சேர்ந்து பிஸ்டன் சேம்பியன்ஷிப்பின் மிகப்பெரிய ரேஸில் கலந்துகொள்ளச் செல்வது தெரிகிறது. டீஸரை நீங்களும் பாருங்கள்
[Cars 3 இரண்டாவது டீஸர்](https://www.youtube.com/watch?v=K9Ew0pGtgIA),”
