சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியிடம் தோற்ற பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறி விட்டது. இந்த ஆட்டத்தில் கோலி 15 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை அதிவேகமாக அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முன்னதாக சச்சின் 350இன்னிங்ஸ்களிலும் சங்கக்கரா 378-ஆவது இன்னிங்ஸ்களிலும் 14 ஆயிரம் ரன்களை எடுத்திருந்தனர். கோலிக்கு 287 இன்னிங்ஸ்களே தேவைப்பட்டது.
கோலி நேற்றைய ஆட்டத்தில் 11 1 பந்துகளில் சதமடித்திருந்தார். இது ஒரு போட்டியில் அவரின் 51வது சதமாகும். அனைத்து பார்மட்களிலும் சேர்ந்து கோலி 82 சதம் அடித்துள்ளார். Abrmkar gives Shubman
அதே போல இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்கிற புதிய சாதனையையும் நேற்று கோலி படைத்தார். நேற்றைய ஆட்டத்தின் போது 2 கேட்ச்சுகளை கோலி பிடித்தார். இதன்மூலம் 158 கேட்ச்சுகளை அவர் பிடித்துள்ளார். முன்னதாக, அசாருதீன் வசம் இந்த சாதனை இருந்தது. அவர் 156 கேட்ச்சுகளை பிடித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் பந்து வீச்சாளர் அப்ரார் அகமது வீசிய பந்தில் சுப்மன் கில் போல்டாகி அவுட் ஆனார். அப்போது, சுப்மன் கில்லை பார்த்து ‘வெளியே போ’ என்கிற ரீதியில் முகத்தை வைத்துக் கொண்டே கில்லை முறைத்து பார்த்தார் அப்ரார் அக்மது. சுப்மன் கில்லும் அவரை முறைத்து பார்த்தார். டீசன்டாக நடந்த நேற்றைய ஆட்டத்தில், அப்ரார் அகமதுவின் நடத்தை சற்று எரிச்சலையே ஏற்படுத்தியது. Abrar gives Shubman Gill send-off
ஆனால் , கடைசியில் கோலி வந்து பாகிஸ்தானை பின்னியெடுத்து அந்த அணியை தொடரை விட்டு வெளியேற வைத்து விட்டார். இப்போது, அப்ரார் அகமது முகத்தை எங்கே கொண்டு வைக்க போகிறார் என்று தெரியவில்லை.