எங்களைப் பற்றி...

தகவல் தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியை தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்யவும், புதிய தகவல் தொழில்நுட்பங்கள் மூலம் ஊடக ஜனநாயகத்தைப் பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கொண்டுசேர்க்கவும் தொடங்கப்பட்ட நிறுவனம் Annamalai Digital India Pvt. Ltd. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இதன் முதல் வெளியீடு தமிழின் முதல் மொபைல் பத்திரிகை மின்னம்பலம் minnambalam.com ஆகும்.

* செய்திகளை அவசர கதியில் வழங்காமல் துல்லியமாகவும், தெளிவாகவும், சரியாகவும் வழங்குவதே மின்னம்பலத்தின் நோக்கம். மின்னம்பலம்.காம் தினமும் காலை 7 மணி, பகல் 1 மணி, மாலை 7 மணி என மூன்று தடவைகள் அரசியல், கலை, சமூகம், பொருளாதாரம் என நான்கு பிரிவுகளில் செய்திகளை வெளியிடுகிறது.

* செய்திகளைப் பொறுத்தவரை, அனைத்துச் செய்திகளும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படும். மக்களைப் பாதிக்கும் செய்திகள், தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்கள், வக்கிரச் செய்திகள், சாதி / மதவெறியைத் தூண்டும் செய்திகள் வெளிவராது.

* சிறப்புக் கட்டுரைகளைப் பொருத்தவரை, அனைத்துத் துறை சார்ந்த கட்டுரைகளும் தினமும் வெளியிடப்படும். அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, கலை, அறிவியல்,பொழுதுபோக்கு என அனைத்துத் துறைகள் சார்ந்த விமரிசனங்கள், அலசல்கள், மதிப்பீடுகள், அறிமுகங்கள், பாராட்டுகள் அந்தந்தத் துறைசார்ந்த விமர்சகர்கள், வல்லுநர்கள், நிபுணர்களிடமிருந்து பெறப்பட்டு வெளியிடப்படும்.

உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

அ.காமராஜ், ஆசிரியர் நிர்வாக இயக்குநர்

இதழியல் துறையில் 29 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருபவர். நக்கீரன் இணையாசிரியராக ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படும்போதெல்லாம் அதற்கு எதிராக உரத்த குரல் கொடுத்தவர். சாமானிய மக்கள் பார்வையில் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டவர். சமூக, அரசியல் துறைகளில் சிறந்த புலனாய்வுக் கட்டுரைகள் எழுதி, தமிழ் புலனாய்வுத் துறையில் தனக்கென்று ஒரு இடத்தைக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர். தமிழ் ஊடகத்தில் புதிய மடைமாற்றம் ஏற்படுத்த Annamalai Digital India Pvt. Ltd. நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

ஜெயசுதா காமராஜ் , இயக்குநர்

சென்னையில் மைண்ட்-ஜோன் உளவியல் ஆலோசக மருத்துவமனையை 2013இல் நிறுவி செயல்பட்டுவருகிறார். மனநலம் பாதித்தவர்களுக்கும், போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கும்(தற்கொலை, வன்முறை நடத்தைகள் போன்ற) பிற மனநல பிரச்னைகளுக்கும் இம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஊடகத்தில் உளவியலின் பங்கை நன்கு அறிந்தவர். உளவியல் ஆலோசனை வழங்குவதிலும், உளவியல் பயிற்சிப் பட்டறை நடத்துவதிலும், உளவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுவருகிறார். மனநல ஆரோக்கியத்தை அடித்தட்டு மக்களுக்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக பல ஊடக நிகழ்வுகளில் பங்குகொண்டு சமூகப்பணி ஆற்றி வருகிறார்.

ஜெ.ஜெயரஞ்சன், ஆசிரியர் குழு ஆலோசகர்

பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராக பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். புகழ்பெற்ற பல சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் அழைப்பின்பேரில் வருகைதரு ஆய்வாளராகப் பணியாற்றிவருகிறார். அப்பல்கலைக்கழகங்களின் பல பேராசிரியர்களுடன் இணைந்து பணியாற்றியும்வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. இந்திய அரசும் தமிழக அரசும் இவரது ஆய்வுகளைக் கொள்கை முடிவு எடுப்பதற்குப் பயன்படுத்திவருகின்றன.

அருண் வைத்தியலிங்கம், வழக்கறிஞர் சட்ட ஆலோசகர்

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 26 ஆண்டுகளாக வழக்கறிஞராகச் சிறப்பாக செயல்பட்டுவருபவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய, மாநில அரசுகள் இவரைப் பல வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞராக நியமித்துள்ளன.

காந்தி பாலசுப்ரமணியன், கலைக் குழு ஆலோசகர்

நாட்டுப்புறவியல், தொல்கலை வரலாற்று ஆர்வலர்

டி.ஐ. அரவிந்தன், நிர்வாக ஆசிரியர்

இதழியல் துறையில் 27 ஆண்டுக் கால அனுபவம் கொண்டவர். இந்தியா டுடே, காலச்சுவடு, சென்னை நம்ம சென்னை, நம் தோழி ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். தி இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்களின் ஆசிரியராக அண்மைக் காலம்வரை பணியாற்றிவந்தவர். அந்நாளிதழை உருவாக்குவதற்கான முக்கியக் குழுவில் பங்குபெற்றவர்.

சிறுகதைகள், நாவல், விமர்சனக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, மகாபாரதச் சுருக்கம் என இதுவரை இவரது பத்து நூல்கள் வெளியாகியுள்ளன. இதழியல் பயிற்சி வகுப்பு நடத்திய அனுபவமும் உண்டு.

இங்கிலாந்து வேல்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டிருக்கிறார். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளியானது.

இலக்கியம், தத்துவம், பெண் உரிமை, அரசியல், மொழி, திரைப்படம், கிரிக்கெட் ஆகியவை குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார்.

வித்யாகுமார், முதன்மை துணை ஆசிரியர்

சட்டம் பயின்றவர். விகடனில் 2007 முதல் 2017 மார்ச் வரை பணிபுரிந்தவர். சமூகம், பெண்கள் சார்ந்த கட்டுரைகள் எழுதியியிருக்கிறார். மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலராகவும் பணிப்புரிந்திருக்கிறார். சமூக ஊடகங்களில் தொடர்ந்து இயங்கிவருகிறார்.

வேல்முருகன், மெய்ப்பு நோக்காளர்

விற்பனைப் பிரதிநிதி, சுய தொழில், நில வணிகம், எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களையும், தமிழ் வாசிப்பின் பலனையும், மின்னம்பலத்துடன் ஒருங்கிணைப்பவர்.

#அரசியல்

ராகவேந்திரா ஆரா, பொறுப்பாசிரியர்

அச்சு ஊடகத் துறையில் 16 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவருகிறார். நக்கீரன் வாரம் இருமுறை இதழில் உதவி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் தொடர்ந்து ஜூனியர் விகடன் இதழில் மூத்த உதவி ஆசிரியராக பணியாற்றினார். தமிழக அரசியல் இதழில் இணை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அரசியல், சமூகம், கலை போன்ற துறைகளில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நக்கீரன் இதழில் வெளியான ‘இந்துமதம் எங்கே போகிறது?’ ஜூனியர் விகடனில் வெளியான ‘கோபசாரி’ ஆகிய தொடர்களைத் தொகுத்து எழுதியுள்ளார். தணியாத அரசியல், சமூக, இலக்கிய தாகம் கொண்ட ஆரா, ‘சர்க்கரை கம்மியாய் ஒரு முத்தம்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். ஆவணப் படங்கள், குறும்படங்களுக்குப் பாடல்களும் எழுதியுள்ளார்.

எம்.பி.காசிநாதன், சிறப்பு நிருபர்

23 ஆண்டுகள் நக்கீரன் இதழில் நிருபராகப் பணியாற்றியுள்ளார். சமூகத்தில் அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் பல பிரச்னைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதன் மூலமாக கவனம் பெற்றவர். அரசியல், சமூகம், குற்றவியல் சார்ந்து இவர் எழுதிய கட்டுரைகள் வாசகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன.

த.எழிலரசன், நிருபர்

இளங்கலை வேளாண்மை பட்டப் படிப்பு முடித்த இவர், பத்திரிகைத் துறையின்மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக ஆர்வத்துடன் செயல்படுகிறார். தற்சார்பு இயற்கை விவசாயத்தை விரும்பும் இவர், நவீன தமிழ் இலக்கியத்திலும், சினிமாமீதும் ஆர்வம் உள்ளவர்.

#கலை

வே.சிவபிரகாஷ், பொறுப்பாசிரியர்

இளங்கலை கணினி பயன்பாடு படித்துவிட்டு, படிப்பு என்பது ஒரு அறிவுதானே தவிர, தகுதியல்ல என்பதையுணர்ந்து ஊடகத்துறை மீதான ஈடுபாட்டால் பத்திரிகைத் துறைக்கு வந்தவர். நக்கீரன் இணையதளத்தில் அசோசியேட் எடிட்டராகவும் ஒளிப்பதிவாளராகவும் 5 ஆண்டு கால அனுபவம். உலக சினிமாவில் விருப்பம். புகைப்படத்தின் வழி, எளிய மனிதர்களின் வாழ்வைப் பதிவதில் ஆர்வம் கொண்டிருப்பதோடு, கலை மக்களுக்கானது என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

மதரா, துணை ஆசிரியர்

காட்சித் தொடர்பியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர். இவர் இயக்கிய 'கதவு' குறும்படம் லக்னோவில் நடைபெற்ற 6வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதை வென்றுள்ளது. மேலும் த.மு.எ.க.ச.வின் 2013ஆம் ஆண்டு சிறந்த குறும்படத்துக்கான விருதையும் வென்றது. மாற்று சினிமா குறித்த தேடலோடு தொடர்ந்து இயங்கிவருபவர்.

தினேஷ் பாரதி, நிருபர்

முதுகலை தமிழ் இலக்கியம் (M.A) பயின்றுள்ளார். இலக்கியம், கலைத் துறைகளில் ஈடுபாடுகொண்டவர். கவிதை குறித்து இணையதளங்களில் தொடர்ந்து எழுதிவருகிறார்.

#சமூகம்

ப.கவிபிரியா, முதுநிலை உதவி ஆசிரியர்.

இளங்கலை தகவல் தொழில்நுட்பக் கல்வியில் பட்டம் பெற்றவர். டிஜிட்டல் ஊடகவாயிலாக எழுத்துப்பணிக்கு வந்தவர். சமூகம், பெண்கள், குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகளில் தனித்த கண்ணோட்டத்துடன் எழுதி வருகிறார்.

முருகேஷ், சிறப்பு நிருபர்

இளங்கலை கணினிப் பயன்பாடு படித்துவிட்டு, பத்திரிகைத் துறையின் மேல் இருந்த ஆர்வம் காரணமாக ‘தின இதழ்’ நாளிதழில் பிழை திருத்துநராகத் தனது பணியைத் தொடங்கியவர். பின்னர் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘தினமலர்’ நாளிதழில் துணை ஆசிரியராக ஓராண்டுக் காலம் பணியாற்றியுள்ளார். சமூகம், அரசியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் உடையவர்.

சா.வினிதா, நிருபர்

இளங்கலை ஆங்கில இலக்கியப் பட்டதாரி. வாசிப்பின் மீதும் இலக்கியத்தின் மீதும் ஆர்வம் கொண்ட இவர், யாரும் கவனித்திராத வித்தியாசமான செய்திகளைக் கொடுப்பதிலும் மொழிபெயர்ப்பதிலும் ஈடுபாடு கொண்டவர்.

#பொருளாதாரம்

செந்தில்குமரன், துணை ஆசிரியர்

கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தின இதழ் நாளிதழில் ஓராண்டு பிழைதிருத்துநராகவும், உதவி ஆசிரியராகவும் இருந்தவர். கிராமப்புற பொருளாதாரம் சார்ந்த செய்திகளை முக்கியம் எனக் கருதுபவர்.

ர. பிரகாசு, நிருபர்

முதுகலை மின்னணு அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர். ஊடகத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கான சமூக, பொருளாதார நிலை குறித்து எழுதுவதில் ஆர்வம் மிக்கவர்.

அ.விக்னேஷ், நிருபர்

இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்றவர். ஊடகத்துறை மீது கொண்ட ஆர்வத்தால் தற்போது இதில் ஈடுபட்டிருக்கிறார்.

#நிர்வாகம்

கண்ணன், மூத்த மேலாளர்

இளநிலைப் பொறியாளர் பட்டம். கணினி செயலித் துறையில் 20 ஆண்டுகள் தொழில்முனைவோராக இயங்கியுள்ளார்.

சக்திவேல், அலுவலக ஒருங்கிணைப்பாளர்

அன்பும் உழைப்பும் கொண்ட நேர்மையாளர்

சேகர், அலுவலக உதவியாளர்

வாழ்வின் வெவ்வேறு அனுபவங்களோடு ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பவர்.