மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. abirami filled with tears in thuglife stage
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று (மே 17) மாலை வெளியானது. தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மணி ரத்னம், கமல்ஹாசன், ஏ.ஆர். ரகுமான், சிம்பு, த்ரிஷா அபிராமி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
அப்போது மேடையில் டிரெய்லர் குறித்து நடிகை அபிராமி பேசுகையில், “இது என்னால் பேசவே முடியாத மொமண்டாக உள்ளது. இந்த நேரத்தில் நான் குட்டி திவ்யாவாக இருந்து அபிராமியாக மாறியதை நினைத்து பார்க்கிறேன். லவ் யூ மணி அண்ட் கமல் சார்” என்று பேசியபடி கண்கலங்கினார்.
அப்போது குறுக்கிட்ட தொகுப்பாளர் விஜய், ’அபிராமிக்கு மணி ரத்னம் மற்றும் கமல் சாரை ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு அபிராமினு பேர் வந்ததே கமல் சார் பாட்டுல இருந்து தான். அதனால் அவங்கள அபிராமினு கமல் பேர் சொல்லி கூப்பிட்டால் ஹேப்பி ஆகி விடுவார்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு கமல், ”அவங்க என்ன சின்ன குழந்தையா, இங்க என்ன பேரா வைக்குறாங்க என்ற கலாய்த்தபடி குணா படத்தில் பேசுவது போல், ‘அபிராமி அபிராமி அபிராமி’ என்று மூன்று தடவை பேர் சொல்ல, உண்மையிலேயே மகழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற நடிகை அபிராமி சிரித்தபடியே கமலை கட்டிப்பிடித்தபடி நன்றி தெரிவித்தார்.