நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே உறவு சரியில்லை என வதந்தி பரவிக் கொண்டிருந்தது. இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. அபிஷேக் பச்சனுக்கு மற்றொரு நடிகையுடன் உறவு இருப்பதாகவும் தகவல் பரவியது.
முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கூட இருவரும் சேர்ந்து வருவதை தவிர்ப்பதாக சொல்லப்பட்டது. ஐஸ்வார்யாவின் 51வது பிறந்த நாளுக்கு கூட அபிஷேக் வாழ்த்து சொல்லவில்லை என்று கூறப்பட்டது. ஐஸ்வர்யா ராய் தனது பெயரில் இருந்த பச்சன் என்ற குடும்ப பெயரையே நீக்கிவிட்டார் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விருந்து ஒன்றில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் ஜோடியாக கலந்து கொண்டு விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராயின் தாயார் பிரிந்த்யா ராயும் கலந்து கொண்டார். மூன்று பேரும் விருந்தில் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். ஐஸ்வர்யா ராய் மிகவும் சிரித்த முகத்துடன் காணப்பட்டார்.
மேலும், தனது தாயார் மற்றும் கணவருடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக்கொண்டார். ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் இந்த பார்ட்டியில் ஒரே நிறத்தில் அதாவது கருப்பு நிற ஆடையில் ஜொலித்தனர்.
சமீபத்தில் .அபிஷேக் பச்சன் தனது மனைவி குறித்து மிகவும் பெருமையாக பேசியிருந்தார். அதில் தனது மனைவி வீட்டில் இருந்து தனது மகளை பொறுப்புடன் கவனித்துக்கொள்வதாகவும், தான் நடிப்பில் கவனம் செலுத்த முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
ஸ்மார்ட் மீட்டர்: அதானி குழுமத்துடன் ஒப்பந்தமா? – தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
சுடுகாட்டில் கைவைத்த கயவர்கள்: 7 சடலங்களுடன் கொள்ளையடித்த மணல் கொள்ளையர்கள்!