ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்: தயாரிப்பாளரின் திட்டத்திற்கு கமல் ஆதரவு!

Published On:

| By Selvam

aayiram porkaasukal movie buy 1 get 1 ticket free

aayiram porkaasukal movie buy 1 get 1 ticket free

தயாரிப்பாளர்-இயக்குநர் கே.ஆர் தனது ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்திற்கு  ‘ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்’ என அறிவித்துள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக இந்த திட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கே.ஆர் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதில்,  “வருகிற 22 ஆம் தேதி “ஆயிரம் பொற்காசுகள்” என்ற நகைச்சுவை படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறேன். விதார்த், சரவணன், அருந்ததி நாயர் உட்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

தற்போதைய சூழ்நிலையில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகின்றனர்.

ADVERTISEMENT

மற்ற நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் வருவதில்லை. அதனால் பல தியேட்டரில் காட்சிகள் ரத்து (show break) ஆகிவிடுகிறது.

இதனால் ஒன்று இரண்டு நாட்களிலேயே  அந்த படம் தூக்கப்பட்டு விடுகிறது. சில படங்கள் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் மூலம் தெரிய வந்தாலும் ரசிகர்கள் படம் பார்க்க வரும்போது, படம் இருப்பதில்லை.

இத்தகைய கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறேன்.

அதாவது அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டும் “ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறேன். இது ரசிகர்கள் மத்தியிலும் தயாரிப்பாளர்கள் மத்தியிலும்  வரவேற்பை பெற்றிருக்கிறது.

எப்போதுமே திரையுலகில் புதுமைகளை புகுத்தி புரட்சி செய்வதில் முன்னணியில் நிற்பது நீங்கள் தான்.  திரைத் தொழிலை காப்பாற்றத் துடிக்கும் தங்களுக்கு இதன் அவசியம் கண்டிப்பாக புரியும் என்று நம்புகிறேன்.

எனவே இந்த முயற்சி ரசிகர்களை சென்றடைந்து முதல் நாள் முதல் காட்சிக்கு கூட்டம் வருமானால் அது மற்ற சிறிய படங்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

எனவே இந்த முயற்சிக்கு தாங்கள் ஆதரவு தெரிவித்தால் நிச்சயமாக இந்தப் படம் வெற்றி பெறும்.

இந்த கான்செப்ட் வெற்றி பெற்றால் அது ஒட்டுமொத்த திரையுலகின் வெற்றியாக உருவெடுக்கும் என்பது உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார். கே.ஆரின் புதிய முயற்சிக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சிறப்பான முயற்சி… தடைகளை உடைத்து வெளிவரும் சிறிய படங்களுக்கு நான் எப்போதுமே ஆதரவாளன் தான். நானும் அப்படி வந்தவன் தான்.

எதிர்கால நட்சத்திரங்கள் சிறிய படங்களில் இருந்தோ அல்லது பெரிய பட்ஜெட் படங்களில் சிறிய வேடங்களில் நடிப்பதன் மூலமாகவோ தான் உருவாகிறார்கள்.

சிறியது என்பது அழகானது மட்டுமல்ல நிச்சயமாக ஒருநாள் பெரியதாக வளரக்கூடியது. ஆனால் பெரியது மேலும் பெரியதாகி ஒரு புள்ளியில் நின்று விடும். வாழ்த்துக்கள்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

ராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நெல்லையில் மீண்டும் ரயில் சேவைகள் துவக்கம்!

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

aayiram porkaasukal movie buy 1 get 1 ticket free

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share