ஆவணி மாத நட்சத்திர பலன் – திருவோணம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

Published On:

| By Selvam

ஆவணி மாத நட்சத்திர பலன் – திருவோணம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

உழைப்பினால் உயர்வினைப் பெறவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் இருந்தால், உயர்வுகளைப் பெறுவீர்கள்.

சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் பொறுமைக்குப் பரிசாகக் கிட்டும்.

வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வரவை சேமிக்கப் பழகுங்கள். வாரிசுகள் வாழ்வில் நல்லவை நடக்கும்.

தொழிலில் உங்கள் உழைப்பே லாபத்தை ஈட்டும். பங்குவர்த்தகத்தில் நிதானம் முக்கியம். அரசியலில் இருப்பவர்கள் அடக்கத்தால் அதீத நன்மை பெறலாம்.

பிறருக்கு ஜவாப், ஜாமீன் தருவதைத் தவிருங்கள். அரசுத்துறையில்  உள்ளோர் மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். புறம்பேசுவோரை புறக்கணியுங்கள்.

மாணவர்கள் மறதியை விரட்ட,  தினம்தினம் படியுங்கள். படைப்பாளிகளுக்கு திறமை பளிச்சிடும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

சட்டதிட்டங்களை தவறாமல் கடைபிடியுங்கள். பயணத்தில் உடைமைகள் பத்திரம். அஜீரணம், தூக்கமின்மை,அலர்ஜி, தலைவலி உபாதைகள் வரலாம். குலதெய்வ வழிபாடு குலம் காக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆவணி மாத நட்சத்திர பலன் – கேட்டை! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

ஆவணி மாத நட்சத்திர பலன் – அனுஷம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

ஆவணி மாத நட்சத்திர பலன் – விசாகம்!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

ஆவணி மாத நட்சத்திர பலன் – சுவாதி!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share