‘அவள்’, ‘நெற்றிக்கண்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மிலிந்த் ராவ். தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘தி வில்லேஜ்’.
ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி இந்த தொடர் உருவாகியுள்ளது. தி வில்லேஜ் தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப் சீரிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வெப் சீரிஸில், ஆர்யாவுடன் திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒரு கிராமத்தில் நடக்கும் அமானுஷ்யங்களால் காணாமல் போகும் தன் குடும்பத்தை மீட்க போராடும் ஹீரோ என்ற கதையை அடிப்படையாக வைத்து ஹாரார் திரில்லர் ஜானரில் ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் இந்த வெப் சீரிஸின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மொத்தம் 5 மொழிகளில் இந்த வெப் சீரிஸ் வெளியாகிறது.
Witness the unseen horrors of 'the village’ 🫣#TheVillageOnPrime, Nov 24 only on @PrimeVideoIN
Trailer out tomorrow at 1:30pm @milindrau #KiranKonda @thespcinemas @DivyaPillaioffl @ActorMuthukumar @Aazhiya_ @highonkokken @Poojaram22 @theabishekkumar #NaveenGeorgeThomas… pic.twitter.com/KEFAQc64hP— Arya (@arya_offl) November 16, 2023
இந்நிலையில் தற்போது இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் இன்று (நவம்பர் 17) மதியம் 1.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் கார்த்தி, ராணா, அபிஷேக் பச்சன் ஆகியோர் தி வில்லேஜ் வெப் சீரிஸின் ட்ரெய்லரை வெளியிடுகின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
