விவாகரத்துக்குப் பிறகு மாதத்திற்கு ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரி ஆர்த்தி தாக்கல் செய்த மனு மீது ரவி மோகன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Aarti ravi wants Rs 40 lakh alimony per month from ravi mohan
நடிகர் ரவிமோகன் (ஜெயம் ரவி)-ஆர்த்தி விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம், தனது 15 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவித்தார். தொடர்ந்து நீதிமன்றத்திலும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் நீதிபதி தேன்மொழி முன்பு இன்று ஆஜரானார்கள்.
அப்போது, எந்த காரணத்திற்காகவும் தன்னால் சமரசம் செய்ய முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெற விரும்புவதாகவும் ரவி மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆர்த்தி தரப்பில், ‘விவாகரத்துக்குப் பிறகு மாதத்திற்கு ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் ரவிமோகன் வழங்கக்கோரி உத்தர பிறப்பிக்க வேண்டும்’ என எதிர் மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து ஜெயம் ரவியின் பதிலைக் கேட்ட பிறகு, ஜூன் 12 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும், ஒருமித்த கருத்து எட்டப்படாததால், இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வ பதில்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த சென்னை குடும்பநல நீதிமன்றம், ரவி மற்றும் ஆர்த்தியை அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சமரச அமர்வில் பங்கேற்கச் சொன்னது. ஆனால் அவர்கள் இருவரும் அதில் எந்த ஆர்வமும் காட்டாததுடன் கலந்து கொள்ளவும் இல்லை. இதனையடுத்து மத்தியஸ்த முயற்சிகள் தோல்வியடைந்ததாக நீதிமன்றத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
