Aan Paavam Pollathathu Movie Trailer 2025
சின்னத்திரையில் தனக்கென்று தனிப்பட்ட ரசிக வட்டத்தைக் கொண்டிருந்தவர் ரியோ ராஜ். இவரது நடிப்பில் வெளியான ‘ஜோ’ ரசிகர்களுக்கு ‘ப்ரெஷ்’ஷான திரையனுபவத்தைத் தந்தது. இந்த ஆண்டில் அவரது நடிப்பில் ‘நிறம் மாறும் உலகில்’, ‘ஸ்வீட் ஹார்ட்’ படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து வரத் தயாராக, இருக்கிறது ‘ஆண் பாவம் பொல்லாதது’. Aan Paavam Pollathathu Movie Trailer 2025
2011இல் வந்த ‘கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை’ மூலமாக அறிமுகமான இவர், பின்னர் சன் மியூசிக் ஆர்ஜே ஆனார். ஐந்தாறு ஆண்டுகள் கழித்து ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’ல் நடித்து பிரபலம் ஆனார். கணிசமான ரசிகர்களைப் பெற்றார்.
அந்த சூட்டோடு ‘சத்ரியன்’ படத்தில் துணை பாத்திரம் ஒன்றில் நடித்த ரியோ ராஜ், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’வில் நாயகன் ஆனார். அதன்பிறகு ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ படங்களில் நடித்தார்.
‘ஜோ’வில் ரசிகர்கள் விரும்புகிற ஒரு ‘ரொமான்ஸ் ஹீரோ’வாக திரையில் தெரிந்தார். அதில் மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா என இரண்டு நாயகிகள். அப்படத்தில் ரியோ – மாளவிகா சம்பந்தப்பட்ட முன்பாதி ரசிகர்களிடத்தில் கொண்டாட்டத்தை விதைத்தது.

இந்த ஜோடியை மீண்டும் ஒன்றிணைத்திருக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல். ‘பிளாக் ஷீப்’ யூடியூப் சேனல் வீடியோக்களை தந்த அனுபவமுடைய இவர், இப்போது ‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்தை இயக்கியிருக்கிறார். இதன் அறிமுக வீடியோ இப்போது வெளியாகியிருக்கிறது. Aan Paavam Pollathathu Movie Trailer 2025
’இந்த சொசைட்டியில ஆண்கள் எவ்ளோ கஷ்டப்படுறாங்க தெரியுமா’ என்று ஃபேஸ்புக்கில் ‘காமெடி’யாக பதிவிடுவது போல, பட்டிமன்றங்களில் பேச்சாளர்கள் ‘வக்காலத்து’ வாங்குவது போல, ஆண்களின் சார்பாகத் தனது கருத்துகளை ஒரு ஆண் முன்வைப்பதாக அமைந்திருக்கிறது இந்த வீடியோ.
‘உங்களுக்கு ஆண் குழந்தை பொறந்திருக்கு’ என்று மருத்துவர் சொல்ல, ‘போயும் போயும் ஆம்பள பிள்ளையா பொறந்துட்டியேடா’ என்று ஆண்கள் இந்த சமூகத்தில் படுகிற அவதிகளை ‘பொதுவாக’ப் பேசுவதாக ரியோ ராஜின் வசனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடியோவின் பெரும்பகுதி ‘சிங்கிள் ஷாட்’ ஆக ஆக்கப்பட்டிருக்கிறது. அதில் அசராமல் ரியோ வசனம் பேசுவதுதான் ஹைலைட்.
இந்த படத்தில் அவரது மனைவியாக நடிக்கிறார் ‘ஜோ’ புகழ் மாளவிகா மனோஜ். சித்து குமார் இதற்கு இசையமைத்திருக்கிறார். சிவகுமார் முருகேசன் இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார். Aan Paavam Pollathathu Movie Trailer 2025
‘ஆண்’ என்கிற வார்த்தை தாலியால் கட்டுண்டு இருப்பது போன்று இதன் டைட்டில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. டைட்டில், முதல் ப்ரோமோ என்று படத்தின் சாராம்சத்தைச் சட்டென்று விளக்கியிருக்கிறது ‘ஆண் பாவம் பொல்லாதது’ படக்குழு. இது அப்படியே திரையிலும் முழுமையாகப் பிரதிபலித்தால், நல்லதொரு ‘பொழுதுபோக்கு’ காணக் கிடைக்கும்.. கிடைக்கட்டும்..! Aan Paavam Pollathathu Movie Trailer 2025


