ADVERTISEMENT

நாளைய இயக்குனர் மூலம் வந்த இன்றைய இயக்குனர்

Published On:

| By Minnambalam Desk

தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு , சமுதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பேசும் படம் “ஆக்காட்டி”.

ADVERTISEMENT

நாளைய இயக்குனர் – சீசன் 6 குறும்படப் போட்டியில் பங்கேற்று, அதில் அடாப்ட் செய்யப்பட்ட குறும்பட திரைக்கதைக்கான இறுதிப்போட்டி விருதைப் பெற்ற ஜெய் லட்சுமி இயக்கிய படம் இது.

ADVERTISEMENT

56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில் WAVES Film Bazaar பிரிவின் கீழ் “சிறந்த திரைப்பட அடையாள விருதை ‘ ஆக்காட்டி திரைப்படம் பெற்றுள்ளது.” படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்பின் மூலம் கவனம் பெற்ற ஆண்டனி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் முல்லையரசி , சிறுவனாக சுபாஷ் ஆகியோர் கதையின் மாந்தர்களாக நடித்து உள்ளனர்.

ADVERTISEMENT

விரைவில் திரைக்கு வருகிறது ஆக்காட்டி.

மக்கள் மனதை வெல்வதே உண்மையான விருது. அதில் ஒரு காட்டு காட்டுமா ஆக்காட்டி?

ADVERTISEMENT

–ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share