Aadujeevitham: படைத்த புதிய சாதனை… யாராலும் தடுக்க முடியாது போல!

Published On:

| By Manjula

பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.

கடந்த மார்ச் 28-ம் தேதி பிரித்விராஜ், அமலாபால் மற்றும் பலர் நடிப்பில் உருவான ‘ஆடுஜீவிதம்’ படம் உலகம் முழுவதும் வெளியானது.

பிழைப்பு தேடி வெளிநாடு செல்லும் ஒருவன் படும் கஷ்டங்களும், அங்கிருந்து தப்பிக்க அவன் மேற்கொள்ளும் முயற்சிகளுமே இப்படத்தின் கதையாகும்.

‘ஆடுஜீவிதம்’ என்ற பெயரில் வெளியான நாவலை அதே பெயரில் இயக்குநர் பிளெஸ்ஸி படமாக்கி இருந்தார். இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது படம் வெளியான 3 நாட்களிலேயே 49 கோடியை வசூல் செய்துள்ளது. இந்தநிலையில் இன்று (மார்ச் 31) படம் 5௦ கோடியை வசூல் செய்துள்ளது.

குறுகிய நாட்களிலேயே படம் 5௦ கோடியை வசூல் செய்துள்ளதால், வரும் நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் மேலும் பல சாதனைகளை இப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சும்மல் பாய்ஸ், பிரமயுகம், பிரேமலு என மலையாள படங்கள் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகின்றன. அந்த வரிசையில் லேட்டஸ்ட் ஆக ஆடுஜீவிதம் படமும் இணைந்துள்ளது.

மொத்தத்தில் இந்த 2024-ம் ஆண்டு மாலிவுட் சினிமாவின் பொற்காலமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு!

IPL 2024: பஞ்சாபை பஞ்சு பஞ்சா பிச்சுப்போட்ட சின்ன பையன்… போட்டிபோட்டு தேடும் ரசிகர்கள்!

ஹாட் ஸ்பாட்: விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share