அதிமுகவை விஜய் ஏன் எதிர்க்க வேண்டும்? – ஆதவ் அர்ஜூனா

Published On:

| By Selvam

Aadhav Arjuna asks why vijay oppose aiadmk

எதிர்க்கட்சியான அதிமுகவை தவெக தலைவர் விஜய் ஏன் எதிர்க்க வேண்டும் என்று தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா இன்று (மே 20) கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா, “எதிர்க்கட்சியாக இருந்தபோது சிஏஏ சட்டத்திற்கு எதிராக திமுக கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அதேபோன்ற நிலையை வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவில் எடுத்தார்களா? இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்று கூறும் தமிழக அரசு, வக்ஃப் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தங்களை ஏன் இணைத்துக்கொள்ளவில்லை. Aadhav Arjuna asks why vijay oppose aiadmk

Aadhav Arjuna asks why vijay oppose aiadmk

கேரள அரசு இந்த வழக்கில் தங்களை இணைத்துக்கொண்டது போல, தமிழக அரசும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, “அதிமுக – பாஜக கூட்டணில் தவெக இடம்பெற வாய்ப்பிருக்கிறதா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். Aadhav Arjuna asks why vijay oppose aiadmk

இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜூனா, “கொள்கை எதிரியான பாஜக, அரசியல் எதிரியான திமுக ஆகிய இருவருடனும் கூட்டணி கிடையாது என்று விஜய் தனது முதல் மாநாட்டிலேயே தெளிவுபடுத்திவிட்டார். அதிமுகவை தவெக ஏன் எதிர்ப்பதில்லை என்று எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள். ஒரு எதிர்க்கட்சியை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும். அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தவுடன் அடுத்த நாளே அதற்கு எதிராக நாங்கள் அறிக்கை வெளியிட்டோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜூனா, “திமுக எப்போதும் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற சரித்திரம் கிடையாது. நாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக 400 தொகுதியில் வெல்வோம் என்று சொன்னது போல தான் திமுக தற்போது சொல்கிறார்கள். 2011 சட்டமன்ற தேர்தலில், திமுகவுக்கு என்ன ரிசல்ட் கிடைத்ததோ, அதே ரிசல்ட் தான் 2026 தேர்தலிலும் கிடைக்கும்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share