தவெகவில் ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல் குமார்… விஜய் கொடுத்த புதிய பதவி!

Published On:

| By Selvam

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மாநில அளவிலான 19 புதிய பொறுப்பாளர்களை இன்று (ஜனவரி 31) நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

“அண்மையில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைய உள்ளார். கட்சியில் தனக்கு பொதுச்செயலாளர் பதவி கேட்டுள்ளார்” என்று நேற்று (ஜனவரி 30) மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். aadhav arjuna appointed tvk

இந்தநிலையில், தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனாவை நியமித்துள்ளார் விஜய்.

இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு ரீதியிலானக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், வலுவானத் தேர்தல் பிரசாரக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

1. ஆதவ் அர்ஜுனா, தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்

2. சி.ஆடி.ஆர்.நிர்மல் குமார் துணைப் பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு )

3. ஜெகதீஷ், தலைமைக் கழக இணைப் பொருளாளர்

4. ராஜ்மோகன், கொள்கைப் பரப்புச் செயலாளர்

5. லயோலா மணி (எ) A.மணிகண்டன், கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

6. சம்பத்குமார், கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

7. கேத்ரின் பாண்டியன், கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

8. வீரவிக்னேஷ்வரன், செய்தித் தொடர்பாளர்

9. ரமேஷ், இணைச் செய்தித் தொடர்பாளர்

10. ஜெயபிரகாஷ், தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்

11. குருசரண், தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

12. ரஞ்சன் குமார், தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

13. குருமூர்த்தி, சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்

14. ராம்குமார், சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

15. வெங்கடேஷ், சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

16. நிரேஷ் குமார், சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

17. அறிவானந்தம், சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

18. விஷ்ணு, சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

19. ஃப்ளோரியா இமாக்குலேட், சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

மேற்கண்ட பொறுப்புகளில் நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் எனது உத்தரவு மற்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனைக்கிணங்க, கழகப்
வழிகாட்டுதலின்படி கழகப் பணிகளை மேற்கொள்வார்கள்.

கழகத் தோழர்களும், அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கானக் கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, என்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். aadhav arjuna appointed tvk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share