திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் வாசிகளுக்கு என்று தனி வரிசை வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் பக்தர்கள் விரைவில் சுவாமி தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதனால், ஒருவரே மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த வரிசையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து பக்தர்களின் தரிசனம் தாமதமானது. இதனால், இந்த வரிசை செவ்வாய்க்கிழமை மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வரிசையில் தரிசனம் செய்பவர்களுக்கு ஆதார் அட்டை எண் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவரே மீண்டும் மீண்டும் சாமி தரிசனம் செய்வது தடுக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சாமி தரிசனம் செய்யும் அனைத்து டிக்கெட்டுகளிலும், நேரம் குறிப்பிடும் நடைமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.
