ஆதார் கார்டுகளை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி தேதியை UIDAI நீட்டித்துள்ளது.
சுமார் 14 ஆண்டுகளுக்கு முன், மத்தியில் ஆட்சி செய்த UPA-2 ஆதார் அட்டையை முதன் முதலில் அறிமுகம் செய்தது. இந்த அட்டையில் உள்ள 12 இலக்க எண், ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக இருக்கும்.
ஆதார் அட்டையில் , ஒர நபரின் கை ரேகை, முகம், முகவரி, தொலைப்பேசி எண் போன்ற விபரங்கள் பதிவு செய்யப்படும். மேலும் இந்த அட்டையை அந்தந்த நபரின் வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது.
இதன் மூலம் அரசாங்க திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு போய் சேரும் என்று தெரிவிக்கப்பட்டது.
முதியோர்களுக்கான பென்ஷன், கேஸ் மானியம், மற்றும் அரசின் பல திட்டங்களுக்கு ஆதார் எண் பயன்பட்டுவருகிறது. இந்நிலையில் , கடந்த பத்து வருடங்களாக ஆதார் அட்டையை புதுப்பிக்காமல் இருந்த நபர்கள், செப்டம்பர் 14, 2024 க்குள் இலவசமாக தங்கள் அட்டையை ஆதார் மையங்களில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று ஆதார் ஆணையமான UIDAI அறிவித்திருந்தது.
இதனால் ஆதார் மைய்யங்களில் கூட்டம் அலைமோதியது. மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில் UIDAI வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஆதார் புதுப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அப்துல் ரஹ்மான்
கொங்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி- ஈரோட்டில் இருந்து கோரிக்கை!